பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி, சிறப்பு பிரார்த்தனை வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
இந்திய நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீரா பென் மோடி நேற்று 30ம்தேதி இயற்கை எய்தினார். மறைந்த திருமதி. ஹீரா பென் மோடி அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், முக்தி பெறவும் , அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும் வேண்டி , வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் , இன்று 31ம்தேதி சனிக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் தன்வந்திரி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மறைந்த ஹீரா பென் மோடி அவர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தி , சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
No comments:
Post a Comment