தன்வந்திரி பீடத்தில்ஆடி பிரதோஷ பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று 29.07.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் ருத்ர ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
எந்த ஒரு மனிதரும் செயலாற்றும் சமயங்களில் செய்கின்ற காரியங்களை
பொறுத்து புண்ணியம், பாவம் போன்றவை
ஏற்படுகின்றன. நாம் மறைந்த பிறகும் நம்முடன் தொடர்ந்து வருகின்ற ஒரு விடயமாக இவை
இருக்கிறது. பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை அறுத்து,
வீடுபேறு அளிக்கும் தெய்வமாகும் சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு
அற்புத தினம் தான் பிரதோஷம் தினம். மேலும் ஆடி மாதத்தில் திங்கள்கிழமை வருகின்ற
ஆடி தேய்பிறை பிரதோஷ தினம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் விசேஷமான ஒரு
நாளாகும்.
இந்நாளில் சிவபெருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் அபிஷேக
ஆராதனைகளிலும் பங்கேற்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும், அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், சந்திர கிரக தோஷங்கள்
நீங்கும், சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை
குணமாகும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும், வீட்டில்
திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும், மேலும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி பிரதோஷ தினமான இன்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் நடைபெற்ற ருத்ர ஹோமத்தில் விசேஷ மூலிகைகள், நவ சமித்துக்கள், நெய், தேன், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், விசேஷ புஷ்பங்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹாபூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மரகதேஸ்வர்ருக்கு பஞ்ச திரவிய கலசாபிஷேகமும், வில்வ இலைகளால் அர்ச்சனையும் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறைபிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment