ஆரோக்ய பீடத்தில் 1000
கிலோமிளகாய் வற்றல் கொண்டுமஹா காளி யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆக்ஞைப்படி உலக நலன் கருதி 31.07.2019
புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆடி அமாவாசையை முன்னிட்டு 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற்றது.
மேற்கண்ட யாகம்
கோபூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து
யாகசால பூஜை, கலச பூஜை நடைபெற்று மஹா காளி யாகமும், காலபைரவர் யாகமும் பத்துக்கும்
மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்று நடந்தது. இந்த யாகத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,
கர்னாடகா, புதுச்சேரி மாநில தன்வந்திரி பக்தர்கள் மக்கள் மட்டுமல்லாது உள்ளூர்
மக்கள்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள், வியாபார பெருமக்கள், திரைப்பட
கலைஞர்கள், மற்றும் பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இதில் 1200 கிலோ மிளகாய் வற்றல், இனிப்பு வகைகள், முறம், பூசணிக்காய், ஜாகெட்பிட்,
மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், நெய், தேன், வேப்ப எண்ணெய், சித்ரான்னங்கள்,
பட்டு வஸ்திரம், பலவகையான பழங்கள், புஷ்பங்கள் சேர்கப்பட்டது.
காளி காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும், நீக்குவதும் இவளே. காளி ஞானத்தின் வடிவம். அறியாமை எனும் இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தைனை போக்கி அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பவள். கருணையின் வடிவம். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்ல முடியும். ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும், அளிப்பவள் இவளே. இவள் துணிவை தருபவள், பயத்தை போக்குபவள், நோய்களை போக்குபவள், மரணமில்லா பெருவாழ்வு தருபவள். இந்த யாகங்கள் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், உயர் பதவி கிடைக்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடு, வாசல், நன்மக்கள் அமையவும், சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யகத்துடன் அஷ்டபைரவர் யாகம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகை பொருட்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆசார்ய வஸ்திரங்கள், மளிகை பொருட்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மிளகாய் வற்றல், சிகப்பு நிற புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், சமித்துக்கள், போன்றவை அளித்து பகவத் கைங்கரியத்தில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்சியுடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த் தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment