Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, July 21, 2019

Theipirai Ashtami - Dasa Bhairavar Yagam - Ashtami Bhairavar Yagam


தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 25.07.2019 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கும் தச பைரவர் யாகத்துடன் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவருக்கு நடைபெறும் யாகங்களிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று பைரவரை வழிபாடுவது வாழ்கையில் சிறந்த பலன்களை அளிக்கும். ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவபெருமானுடைய அம்சம் ஆவார்.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்று அவரை வழிபட்டால் தீராத  பிரச்சனையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிடைக்கும், எண்ணிய காரியங்கள் நிறைவேறும், நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம், உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும், தொழிலில் லாபம் உண்டாகும், வழக்குகளில் வெற்றி பெறலாம், எதிரிகள் நம்மை விட்டு விலகும், கடன் தொல்லைகள் தீரும், யம பயம் அகலும், நீண்ட ஆயுள் கிடைக்கும், வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குவார், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும், வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி பைரவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம், வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும், வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுலாம், வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடையலாம், சனி கிரகத்தினால் ஏற்படும் தொல்லைகள் அகலும், வெளி நாடு வேலை வாய்புகள் கிடைக்கும் போன்ற பல்வேறு நன்மைகளை பெறலாம்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வேண்டி நடைபெறும் யாகங்களிலும், ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment