தன்வந்திரி பீடத்தில் சொர்ண
சனீஸ்வரர் யாகம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளானைப்படி மாதத்தின் முதல் சனிக்கிழமையை
முன்னிட்டு இன்று 06.07.2019 சனிக்கிழமை
காலை 10.00 மணி
முதல் 12.00 மணி
வரை சனி பகவானை வேண்டி சொர்ண சனீஸ்வரர் யாகமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள
பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு எள்
எண்ணெய் அபிஷேகமும் நடைபெற்றது.
ஆயுள்காரகன்
என்றும் அதிர்ஷ்டத்தை அளிப்பவன் என்றும் போற்றி வணங்குகிற சனி பகவானை வேண்டி
நடைபெற்ற சனி சாந்தி ஹோமத்திலும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் பக்தர்கள் பங்கேற்று ஜாதகத்தில்
காணப்படும் சனியின் எதிர்மறைத் தாக்கத்தை நிவர்த்தி செய்யவும், முயற்சிகளில் வெற்றி காணவும், விருப்பங்கள் நிறைவேறவும், அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகவும், எதிர்மறைத் தாக்கங்கள்
விலகவும், நன்மை தரும்
முன்னேற்றங்களைப் பெறவும், தர்மத்தின்
பாதையில் நடந்து, கடவுளோடு
இணைந்த ஒரு வாழ்க்கையை பெறவும், கருணையும், பணிவும் வளரவும், எல்லைகளை
வகுத்து, அதற்குள் ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், இயல்பாகவும், யதார்த்தமாகவும்
இருக்கவும், இலட்சியங்களை
அடையவும், தொழிலில் வாய்ப்புகள் பெற்று முன்னேறவும், அதிகாரம் மேம்படவும், கடமை உணர்வு
ஏற்படவும், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு வளரவும், கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளாசிகளுடன் இறைப்பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment