தன்வந்திரி பீடத்தில்
பவித்ரோத்ஸவம்
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நேற்று 08.07.2019
திங்கள்கிழமை முதல் வருகிற 11.07.2019 வியாழக்கிழமை
வரை நடைபெறும் பவித்ரோத்ஸவத்தின் இரண்டாவது கால ஹோம பூஜைகள் இன்று 09.07.2019
செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி
வரை கோ பூஜை, புண்யாக வாசனம், வேத பாராயணம், சகல தேவதா ஹோமம் போன்ற ஹோம பூஜைகளுடன்
நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை மூன்றாம் கால ஹோம பூஜைகள் நடைபெற உள்ளது.
ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில்
அனுதினம் செய்யப்பட வேண்டிய நித்திய நைமித்திக காம்ய, கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள்
மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற
பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த
ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள்
அகலும். நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட
1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட
உள்ளது. இந்த ஹோமத்தின் மூலம் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பாக்கியம் கிடைக்கும்
மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கபடும்
என்பது திண்ணம். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment