தன்வந்திரி பீடத்தில்சுதர்சன ஜெயந்தி சிறப்பு யாகம்.
பெற்ற பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும்,
சத்ரு பயம் அகலவும், பசுக்கள் ஆரோக்யமாக இருந்து பசு விருத்தி பெறவும் வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 10.07.2019
புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹா சுதர்சன ஹோமத்துடன்,
நவகலச திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும்
தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது.
தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என
வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.
சுதர்சன பெருமாளை வழிபட்டு யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு அவரை சூழ்ந்துள்ள
தீய சக்திகளை அழித்து, நன்மைகள் பல நிறைந்த
ஒரு பெரும் பாதுகாப்பு சக்தியாக நம்மைக் காத்து நிற்கும். வாழ்க்கையில் வளர்ச்சி,
வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை தரும் சுதர்சன
ஹோமத்தின் சிறப்பம்சங்கள்.
விஷ்ணுவை ஆயிரம் நாமங்களால் போற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன், மஹா சுதர்சன ஹோமம் செய்வது, விஷ்ணு
பகவானின் ஆசியையும் அவரது சக்தி வாய்ந்த சகராயுதத்தின் பரிபூரண ஆசிகளையும்
பெற்றுத் தரும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், உங்களைச்
சூழ்ந்துள்ள இருளும், அறியாமையும் விலகும். நேர்மறை ஆற்றல்,
உங்களுக்குள் நிறையும். நன்மைகள் பெருகி, நல்வாழ்வு
வாழ இயலும்.
மஹா சுதர்சன ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சத்ரு பயம், விரக்தி, துர் சொப்னம் போன்றவை
நீங்கும், எதிர்மறை எண்ணங்கள் விலகும், துன்பங்களும்,
தோஷங்களும், சாபங்களும் விலகும், எதிரிகள் தொல்லை விலகும், பயம் நீங்கி வலிமை கிடைக்கும், நடைமுறையில் நல்ல மாற்றங்கள் நிகழும், தன்னம்பிக்கை பிறக்கும்,
தொழிலில் வளர்ச்சி, வழக்கில் வெற்றி, இயற்கை
வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி,
அற்புதமான வாழ்கை, போன்ற பல்வேறு நன்மைகள் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும்
சுதர்சன ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள். இந்த யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு ரட்சை என்று அழைக்கப்படும்
ஹோம பஸ்பம் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment