தன்வந்திரி
பீடத்தில்ஸ்ரீ
தேவி மூகாம்பிகை ஹோமம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம்,
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் இன்று 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதத்தை
முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தேவி மூகாம்பிகை ஹோமமும்,
பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ காயத்ரீ தேவிக்கும், மஹாமேருவிற்கும் சிறப்பு
அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
தேவி
மூகாம்பிகையை வேண்டி நடைபெற்ற ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெற்ற அபிஷேக
ஆராதனைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சகலகாரிய சித்தி பெறவும், சர்வ வஸ்யம், ரோக நிவர்த்தி, வாக்குப்
பலிதம், திருஷ்டிதோஷ நிவர்த்தி, சத்ருநாசம்,
நேத்ர ரோக நிவர்த்தி, எதிலும் வெற்றி, சகல சம்பத்து விருத்தி பெறவும், சோகநாசம், பயம் நீங்கவும், ஞானம், வசீகரணம்,
ஆயுள் விருத்தி, புத்ர விருத்தி உண்டாகவும்,
வித்தை, சங்கீத விருத்தி, தனலாபம் உண்டாகவும், பதவி உயர்வு கிடைக்கவும்,
அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட லசஷ்மி கடாசஷம், தீர்க்க சுமங்கலி பிராப்தி போன்ற பல்வேறு விதமான நன்மைகளை பெற குட்டு
பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும்
இந்த யாகத்தில் விசேஷ மூலிகைகள், மஞ்சள், குங்குமம், நவ சமித்துக்கள், வஸ்திரங்கள்,
விசேஷ புஷ்பங்கள், நெய், தேன், நிவேதனங்கள், சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு மஹா
பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர் போன்ற பல்வேறு
திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
பங்கேற்ற
பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறை
பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment