தன்வந்திரி பீடத்தில்பகளாமுகி யாகத்துடன்நீலா சரஸ்வதி ஹோமம் – வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
உலக மக்களின் நலன் கருதி வருகிற 14.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை
5.00 மணி முதல் 7.30 மணி வரை பகளாமுகி யாகத்துடன் நீலா சரஸ்வதி ஹோமமும்,
வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமமும் நடைபெறுகிறது.
பகளாமுகி யாகம்
:
தமோ குண
சொரூபனான மஹாதேவன் ஆராதிக்கும் ஸ்ரீ பகளாமுகி தேவிதான் தசமஹாவித்யாவிலேயே மிக சக்தி
வாய்ந்த தேவி சொரூபமாகும். தனக்குள் சரிசமமாக இணைந்திருக்கும் சத்வ, ராஜஸ தாமஸ குணங்களின் காரணமாக, சர்வ வல்லமை
படைத்த சக்தியாக ஸ்ரீ பகளாமுகி தேவி உருவங் கொண்டிருக்கின்றாள். ஸ்ரீ
பகளாமுகிதேவியின் மந்திரத்தை ஜபம் செய்து வழிபட்டால் தெய்வங்களைக்கூட ஸ்தம்பிக்கச்
செய்ய இயலும். இதன் காரணமாகவே கடவுளர் அனைவரும் நான்கு வேதங்கள் கூட எட்ட முடியாத
நாயகியான ஸ்ரீ பகளாமுகி தேவியை வணங்கி ஆராதிக்கின்றனர். பகளாமுகி யாகத்தில்
பங்கேற்பதால் எதிரிகள் செய்யும் வம்பு வழக்குகளை முறியடித்து நிரந்தர தீர்வு கிடைக்கும். பில்லி சூனியத்தின் தீய விளைவுகளை அகற்றும். பகைவர்களையும் அவர்கள் ஏற்படுத்திய சிக்கல்களையும் புறமுதுகிட்டு ஓட
வைக்கும். வழக்குகளில் உங்களுக்கு வெற்றியைத் தந்திடும். மூதாதையரின் சாபங்களாலும் முற்பிறவியில் செய்த பாவங்களாலும் ராகு
தோஷத்தாலும் ஏற்படும், பெரும்
மருத்துவர்களாலும் கண்டறிய இயலாத நோய்களையும் போக்கி நலத்தையும் பலத்தையும்
தந்திடும்.
ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம் :
இந்த ஹோமம், எதிரிகளை வெற்றிகொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை
நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும் உதவக்
கூடியது. நீலா சரஸ்வதி ஹோமம் செய்த பின்னர், யந்திரத்தை
வீணையுள்ள வித்யாவதி சரஸ்வதி படத்துடன் வைத்துப் பூஜை செய்ய கல்வியும்
சிறப்புறும்.
வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம் :
நம் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிடைகவும், ஆசைகள் நிறைவேறவும், தடைகள் விலகவும், முயற்சிகளில் வெற்றி
அடையவும் செய்யப்படும் ஹோமமே வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம் ஆகும்.
மேலும்
பக்தர்கள் அனைவரும் இந்த ஹோம பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன்
அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment