தன்வந்திரி பீடத்தில்சுக்கிர ஏகாதசி விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்
உலக மக்கள் நலன் கருதி சுக்கிர ஏகாதசியை முன்னிட்டு இன்று 12.07.2019 வெள்ளிக்கிழமை
காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை ஏகாதசி ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நெல்லிப்பொடி அபிஷேகமும்
மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது.
ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய திதியாகும்.
இந்த
நாளில் பெருமாளை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும், ஆராதனைகளிலும் பங்கேற்பது
சிறந்த பலனை தரும். வெள்ளிக்கிழமை வரும் ஏகாதசியை சுக்கிர ஏகாதசி என்று கூறுகிறது.
இந்நாளில் பெருமாளை வழிபடுபவர்கள் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும்
தவழும், ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்த அற்புதமான நன்னாளில், பெருமாளை குழப்பங்கள் யாவும்
விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும்
உண்டாகும் என்பது உறுதி.
இத்தகைய
சிறப்புகள் வாய்ந்த சுக்கிர ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற ஹோமத்திலும், விசேஷ
அபிஷேக ஆராதனையிலும் பக்தர்கள் பங்கேற்று உலக மக்கள் நலன் வேண்டியும், துன்பங்கள் துயரங்கள் நீங்கவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஆரோக்யம், ஐஸ்வர்யம்,
ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கவும், சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளாசி வழங்கி நெல்லிப்பொடி தீர்த்த பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment