தன்வந்திரி பீடத்தில்ஆடி கிருத்திகையை முன்னிட்டுசுப்ரமண்ய ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி ஆடி கிருத்திகையை முன்னிட்டு வருகிற 26.07.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 வரை ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சுப்ரமண்ய ஹோமம், விபூதி அபிஷேகம் நடைபெற உள்ளது.
முருகனுக்கு உகந்த மாதம் ஆடி மாதமாகும். அதில் ஆடிக்கிருத்திகை மிகவும் நன்மை அளிக்க கூடியதும் சிறப்பு வாய்ந்த்துமாகும். வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத
முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண துவக்கமான தை மாதம்
வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய
கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
இந்த மூன்றும் சுப்ரமண்ய கடவுளுக்கு உகந்த நாட்கள் ஆடிக்கிருத்திகையாகும்.
இந்த “ஆடி கிருத்திகை” முருகனுக்குரிய” நட்சத்திரமாக கருதப்படுகிறது.
அதிலும் இந்த ஆடி கிருத்திகை தினமானது சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும்
தட்சிணாயண காலத்தின் தொடக்கத்தில் வருகிறது. இக்காலம் பகல் வெளிச்சம் குறைந்து
இரவின் இருள் நீடித்திருக்கும் பருவத்தின் தொடக்க காலமாகும். எனவே மக்கள் தங்களின்
வாழ்வில் துன்பம் எனும் இருள் அதிக காலம் நீடிக்காமல் இருக்க முருக பெருமானை
வேண்டுவதால் அவர்கள் வாழ்வு ஒளிமயமாக இருக்க அருள் புரிவார் முருகன்.
வேண்டிய பக்தர்களுக்கு உடனடியாக வந்து அவர்களின் வினைகளை நீக்குபவர்
முருக பெருமான் ஆவார். சித்தர்கள் அனைவருக்கும் விருப்பத்திற்குரிய நாயகன் முருகன்
என்பதால் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 468 சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களின் நடுவே
கார்த்திகை குமரனை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
மேலும் தங்க அன்னபூரணியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் ஆடி கிருத்திகையில் இவர்
இருவரை வழிபடுவதால் ஒருவருக்கு வாழ்வில் யாருக்கும் அஞ்சாத மனம், சிறந்த செல்வ நிலை உயர்வான ஆன்ம ஞானம் கிடைக்கும்.
நவகிரகங்களில் முதன்மையானவர் சூரிய பகவான். ஜோதிடம் மற்றும் அறிவியல்
ரீதியாக பார்க்கும் போதும் சூரியன் ஒரு மனிதனின் உடலாரோக்கியம் நன்கு இருக்க
அருள்புரிகிறார். முருகனுக்குரிய ஆடி கிருத்திகை தினம் வெள்ளிக்கிழமை தினத்தில்
வருவது மிகவும் சிறப்பானதாகும். முருக பெருமானை வேண்டி நடைபெறும் சுப்பிரமண்ய
ஹோமத்தில் பங்கேற்றால் உடல் உறுதி பெரும், நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம், மனோவலிமை
பெறும், செல்வ செழிப்பு உண்டாகும், பூமி லாபம் பெறலாம், வீடு
மனை தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், இரத்த சம்பந்தமான நோய்கள்
நீங்கும், சத்ரு பயம் விலகும், இன்னும் பல எண்ணிலடங்கா நன்மைகளை பெற்று ஆடி
கிருத்திகையில் சுப்ரமண்யரின் அருள் பெறலாம்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment