Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, July 2, 2019

Bhuvaneswari Homam - Puthra Bhagya Yagam


தன்வந்திரி பீடத்தில்புவனேஸ்வரி ஹோமத்துடன்புத்திர பாக்ய யாகம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், பல ஆண்டுகளாக உள்ள குலதெய்வ குறைபாடுகள் நீங்கவும் காவல் தெய்வமான ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் வேண்டியும், மனக்குறை போகவும், சாபங்கள், தோஷங்கள் அகலவும் வருகிற 16.07.2019 செவ்வாய்கிழமை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமமும், புத்திர பாக்ய யாகமும், திருமண பிராப்தி வேண்டி திருமண ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீசாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும். ஸ்ரீ மாதா புவனேஸ்வரி மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள். அத்தகைய புவனேஸ்வரி தேவியை வணங்கி நடைபெறும் யாகமே ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம் ஆகும்.

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி :

அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஸ்ரீ சக்ர நாயகியாகவும், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாகவும் விளங்குகிறாள். இவள் வேதங்கள் போற்றும் வேத மாதாவாகவும், அனைத்துலகையும் ஈன்று, எல்லா உயிரினங்களுக்கும் தாயாக விளங்குபவள், மாபெரும் சக்தி படைத்து ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி புரிந்து, நம்மை அரவணைக்கும் அன்னையே ஸ்ரீ மாதா புவனேஸ்வரியாகும். இவளே அனைத்திற்கும் காரண காரணியாகயிருந்து வழி நடத்தி வருகிறாள்.

ஸ்ரீ புவனேஸ்வரி தேவியின் யாகத்தில் கலந்துகொண்டு வழிபட கல்வி, செல்வம், வீரம்யென யாவும்கிட்டும். புவனேஸ்வரி ஹோமத்தின் மூலம் இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது. பூர்வ ஜன்ம புண்ணியம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும். நமது பூமியைப்போல் எண்ணற்ற உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி. புவனம் என்றால் அண்டம், உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் மாதா புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

புவனேஸ்வரி ஹோமம்:

புவனேஸ்வரி ஹோமம் மற்றும் பூஜையானது செவ்வாய்க்கிழமைகளில் செய்யப்படும் பொழுது நாம் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யும் பொழுது வீடு, நிலம் வாங்குவோம், விவசாயம் விளைச்சல்பெரும், பலசாபம் விலகும், குடும்ப ஒற்றுமை, இரத்தம் சம்பந்தபட்ட நோய்கள் விலகும், சுபிக்க்ஷம் அடையலாம், பூமி வழி லாபம் புதிய வீடு கட்டவும் வாங்கவும், மாடுகள் தர கூடியவை,  சகோதர, சகோதரி ஒற்றுமை அமையவும், நல்ல மக்கள் பேரும், நல்ல மனைவி குழந்தை அமையவும், தீராத தடைகள் தீர்ககவும், திருமணம், குழந்தை பாக்யம் பெறவும் சிறப்பு ஹோமங்களுடன் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
.

No comments:

Post a Comment