தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ வராஹி ஹோமம்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள்
நலன் கருதி ஆஷாட நவராத்திரி, பஞ்சமி திதியை முன்னிட்டு வருகிற 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ வராஹி
ஹோமமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகிறது.
மனித உடலும், வராஹ (பன்றி) முகமும் கொண்டவள் ஸ்ரீ வராஹி. அம்பிகையிடம்
இருந்து தோன்றிய ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி,
சாமுண்டி என்னும் சப்த கன்னியர்களில் ஐந்தாவதாக இருப்பவள். அதனால்
வராஹியை வாழ்வின் பஞ்சங்களை துரத்தும் பஞ்சமி தாய் என்று அழைக்கப்படுகிறது. தன்
பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருப்பவள் தேவி வராஹி. சிவன்,விஷ்ணு,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவள். தேவி லலிதாம்பிகையின்
படைத்தலைவியாகவும், சேனாதிபதியாகவும் இருப்பவள். காட்டு பன்றிகள் இழுக்கும் கிரி
சக்கர என்னும் ரதத்தில் போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள் தேவி வராஹி.
வராஹி தேவியை
வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமுகமாகும், தீராத நோய்கள் தீரும், மனநிலை பாதிப்புகள் அகலும், வழக்கு, பூமி
சம்பந்தமான பிரச்சினைகள் நிவர்த்தியாகும், கடன் தொல்லைகள்
அகலும், குழந்தைவரம் கிடைக்கும், கல்வியில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறலாம்,
பில்லி, சூனியம், ஏவல், தோஷம் நீங்கும், நினைத்த காரியம் கைகூடி வெற்றி பெறலாம், எல்லா முயற்ச்சிகளிலும்
வெற்றி கிடைக்கும் போன்ற பல்வேறு நன்மைகள் வாழ்வில் ஏற்ப்படும்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று தேவி வாராஹி அருளுடன் குருவருள் பெற்று ஆனந்தம், ஐஸ்வர்யம், ஆரோக்யம் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment