Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 22, 2019

1000kg Red Chilli Abhishekam


ஜூலை 23ல் தன்வந்திரி பீடத்தில்யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு1000 கிலோ மிளகாய் அபிஷேகம்துவங்குகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு வருகிற 23.07.2019 காலை 10.00 மணிக்கு 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் செய்து பிரதிஷ்டை ஆகியுள்ள அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்குகிறது. இந்த அபிஷேகமானது வருகிற 30.07.2019 ஆடி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.

யக்ஞபூமியாக திகழும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற்று ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி ப்ரதிஷ்டையாகி உள்ளது. இந்த யாகமானது லக்ஷ மோதக கணபதி ஹோமம், 10 லக்ஷம் ஏலக்காய் ஹோமம், சஹஸ்ர சண்டி யாகம், சத சண்டி யாகம், 1,10,008 லட்டு லக்ஷ்மி குபேர யாகம், 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம், லக்ஷ நெல்லிக்கனியால் கனகதாரா ஹோமம் போன்ற பல்வேறு விசேஷ யாகங்கள் நடைபெற்ற 24 மணி நேரம் அணயா மஹா யக்குண்டத்தில் நடைபெற உள்ளது. மேலும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு நடைபெறும் இப்பூஜைகளில் பங்கேற்று வழிபட்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், இரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், புத்திர பக்யம் உண்டாகும், தடைகள் நிவர்த்தியாகி முயற்சிகளில் வெற்றி பெறலாம், ஏவல், பில்லி, சூன்யம் நம்மை விட்டு அகலும், சத்ரு உபாதைகள் நிவர்த்தியாகும் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் நெய், தேன், மூலிகை பொருட்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆசார்ய வஸ்திரங்கள், மளிகை பொருட்கள், புஷ்பங்கள், நிவேதன பொருட்கள், மிளகாய் வற்றல், சிகப்பு நிற புஷ்பங்கள், சிகப்பு நிற பழங்கள், சமித்துக்கள், போன்றவை அளித்து பகவத் கைங்கரியத்தில் பங்குபெற்று இறையருளுடன் குருவருள் பெற்று மகிழ்சியுடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த் தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203






No comments:

Post a Comment