வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்சனி ப்ரீதி யாகத்துடன் சங்கட ஹர கணபதி ஹோமம்.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 20.07.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஜெய மங்கள
மற்றும் தங்க சனீஸ்வரருக்கு சனி சாந்தி ஹோமமும், மாலை சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு
தன்வந்திரி விநாயகர் சன்னிதியில் சங்கட ஹர கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற
உள்ளது.
தன்வந்திரி பீடத்தில்
புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஜெய மங்கள
சனீஸ்வரர் சன்னிதியில் வருகிற 20.07.2019 சனிக்கிழமை
காலை சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகல சனி சாந்தி ஹோமமும் தைலாபிஷேகமும்
நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தன்வந்திரி
விநாயகர் சன்னிதியில் உடல் நோய், மன நோய் நீங்க சங்கட ஹர கணபதி ஹோமமும் அஷ்ட
திரவிய அபிஷேகமும் நடைபெற உள்ளது.
விநாயகர் முழு
முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே
வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள்.
விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும்
சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்.
சங்கடஹர
சதுர்த்தி சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே
(சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு
‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர
சதுர்த்தியாகும்.
ஒவ்வொரு
மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது
இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை
தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும்
அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்
களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள்
பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை
வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய
பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.
முற்பிறவியில்
நாம் செய்த வினையின் பயனால், நமக்கு
இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும்
தருவார். இந்த
யாகங்களிலும் பூஜைகளிலும் எள், நல்லெணேய், வன்னி, எருக்கம், சமித்துகளும், அருகம்புல் நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், மோதகம், அவல், நெல்பொரி, கரும்பு, சுண்டல் போன்ற
பொருட்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment