Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 5, 2019

Dushta Graha Dosha Nivarthi Homam - Sathru Samhara Subramanya Homam


தன்வந்திரி பீடத்தில்

துஷ்ட கிரக தோஷ நிவர்த்தி  ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 08.07.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆனி மாத ஷஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரன் சன்னதியில் சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமமும், துஷ்ட கிரக தோஷ நிவர்த்தி பூஜையும், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

வினை தீர்க்கும் வேலவனாகும் ஸ்ரீ முருகபெருமானுக்கு உரிய சிறப்பான தினம் சஷ்டி தினம்” ஆகும்.  இந்நாளில் முருகபெருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்று வழிபட்டால் அவரின் அருளால் வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பலவிதமான நன்மைகளை பெறலாம். மேலும் மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ வழிவகை செய்யும். ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றி தூய்மையை அடையலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும், கடன் தொல்லை அகலும், உயிர் உணர்ச்சி வளர்க்கும், இரத்த சம்பந்தமான நோய்கள், நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்களுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும், மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிடைக்கும், சந்தான பிராப்தி உண்டாகும், சத்ரு தொலைகள் அகலும் போன்ற பல்வேறு நன்மைகளை பெறலாம்.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203




No comments:

Post a Comment