தன்வந்திரி பீடத்தில் தோஷம்
தீர்த்து சொர்ணம் அளிக்கும்சொர்ண சனீஸ்வரர் யாகம்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளானைப்படி மாதத்தின் முதல் சனிக்கிழமையை
முன்னிட்டு வருகிற 06.07.2019 சனிக்கிழமை
காலை 10.00 மணி
முதல் 12.00 மணி
வரை சனி பகவானை வேண்டி சொர்ண சனீஸ்வரர் யாகமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள
பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு எள்
எண்ணெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
நவக்கிரகங்களில்
சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக ஜோதிடர்கள் மற்றும் அர்ச்சகர்கள்,
ஆச்சாரிய பெருமக்கள் மூலமும் மேலும் பல வகையிலும் அறிந்துள்ளோம். சனி பகவானை, சனீஸ்வரன் என்றும்
ஆயுள்காரகன் என்றும் அதிர்ஷ்டத்தை அளிப்பவன் என்றும் போற்றி வணங்குகிறோம். சனிகிரக
சாந்திஹோமம், சனி பகவானுக்காக செய்யப்படும் ஒரு யாகமாகும்.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் சனி கிரகத்தின் அற்புத சக்தியானது, சில நேரங்களில் துன்பங்களையும், சோதனைகளையும் ஏற்படுத்தி, தவறை
உணர்ந்து நம்மை நேர்வழியில் அழைத்துச் செல்வதே சனி பகவானின் நோக்கமாகும். எனினும், சில நேரங்களில்
சனியின் தாக்கம் நம்மால் தாங்க முடியாததாக அமைந்து வருகிறது. இவற்றை களைவதற்கு சனி
சாந்தி ஹோமம் வழிவகை செய்கிறது. மேலும் ஒருவரின் ஜாதகத்தில்
காணப்படும் சனியின் எதிர்மறைத் தாக்கத்தை நிவர்த்தி செய்யவும், நமது முயற்சிகளில் வெற்றி காணத் துணை புரியும் வகையில், இந்த ஹோமம் தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.
சனிகிரக சாந்திஹோமத்தின்
சிறப்புகளும், பலன்களும் :
சனியின்
எதிர்மறைத் தாக்கம் நீங்கி, துன்பங்கள்
விலகுகின்றன. சனி கிரகத்தின் அருளால், சாதகமான
பலன்கள் கிடைக்கவும், விருப்பங்கள்
நிறைவேறவும், வாய்ப்புகள் பெருகுகின்றன. சனி பகவானை திருப்திப் படுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம். எதிர்மறைத்
தாக்கங்கள் விலகி, நன்மை தரும்
முன்னேற்றங்களைப் பெறலாம். குறிப்பாக, சனிக்கிழமைகளில்
சனி பகவானை இவ்வாறு வழிபடுவதனால், மேலும் சிறந்த
பலங்களை அடையலாம்.
இந்த யாகத்தின்
மூலம் தெய்வீக அருளால், தர்மத்தின்
பாதையில் நடந்து, கடவுளோடு
இணைந்த ஒரு வாழ்க்கையை பெறலாம். கருணையையும், பணிவையும் வளர்த்துக் கொள்ள இயலும். எல்லைகளை
வகுத்து, அதற்குள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும். உங்கள் பாதையில் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயல்பாகவும், யதார்த்தமாகவும்
இருக்க கற்றுக் கொள்ள முடியும். உங்கள்
இலட்சியங்களை அடைய முடியும். தொழிலில் வாய்ப்புகள் பெற்று, முன்னேற முடியும். உங்கள்
அதிகாரம் மேம்படும். கடமை உணர்வு
ஏற்படும். ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள இயலும் என்பது
பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இப்பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment