தன்வந்திரி பீடத்தில்ஆடித் திருவோணத்தில்
தைலாபிஷேகத்துடன்
ஆரோக்ய ஹோமம் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் இன்று 18.07.2019 வியாழக்கிழமை திருவோண
நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றது.
திருமாலை போற்றி வழிபடும் நாட்களில்
திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய
திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். இங்கு ஒரே கல்லில் பிரதைஷ்டை
செய்யப்பட்டுள்ள விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும், ஆரோக்ய ஹோமமும் நடைபெற்றது.
மாபெருடம் ஹோமம் :
திருவோண திருநாளில் விஷ்ணுவாகிய
தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை
கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், தன்வந்திரி
ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி
மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெற்றது.
ஆரோக்கியம்
தரும் பிரசாதம் :
திருவோண நாளில் நடைபெற்ற தன்வந்திரி
ஹோமத்தில் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க பிரார்த்தனை செய்யப்பட்டு ஸ்ரீ விநாயக
தன்வந்திரிக்கு தைலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நோய்கள் நீங்க தைல பிரசாதம்
வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment