தன்வந்திரி
பீடத்தில் வருகிற
ஷஷ்டியில்
இழந்த பதவிகள் பெறவும் வாழ்வில்
முன்னேற்றம் வேண்டியும்
ஸ்ரீ
சுப்ரமண்ய சத்ரு
சம்ஹார ஹோமத்துடன்
திரிசதி அர்ச்சனை
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 19.06.2018 செவ்வாய்கிழமை கூடிய ஷஷ்டி திதியில், தன்வந்திரி பீடத்தில்
உள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமத்துடன்
திரிசதி அர்ச்சனை நடைபெற உள்ளது.
சுப்ரமண்ய
சத்ரு சம்ஹார ஹோமம்
மற்றும் திரிசதி அர்ச்சனை விக்னேஸ்வர பூஜையுடன்
தொடங்கி மூலவர் ஸ்ரீ கார்த்திகை
பெண்களுடன் உள்ள குமரனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து ஆறுவித புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, ஆறு பிரசாதங்கள் நிவேதனம் செய்து, வேலுக்கும் விசேஷ அபிஷேகம் செய்து, தேன் முக்கிய பிரசாதமாக படைத்து, அஷ்ட திரவிய
அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம்,மஹா தீபாராதனை வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமத்திலும் திரிசதி அர்ச்சனையிலும் கலந்துகொள்ளும் அன்பர்களுக்கு சத்ரு தொல்லை நீங்கி இழந்த பதவிகள்
பெறவும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஆறுமுகபெருமான் அருள்புரிவார் எனவே பக்தர்கள்
திரளாக கலந்து கொண்டு சுப்பிரமணியர் அருள் பெருக. மேலும்
பூர்வ வினை, பாவம் போகும். குறைவில்லாத, வளமையான வாழ்வு
மிகுத்து வரும். முருகப் பெருமானை வணங்குபவருக்கு எல்லா நலன்களும் கிட்டும்
என்கிறார் நக்கீர பெருமான். தன்வந்திரி
பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனை வணங்குபவர்களுக்கு கிட்டாத நன்மையே
இல்லை எனலாம். பூமி தோஷம் நீங்க,
புற்று நோய் அகல, வெளிநாடு செல்ல, வேலை வாய்ப்பு
பெற, புத்திர விவாகம் விரைந்து நடைபெற, ஊனம் அகல, கண்பார்வை
தெளிவடைய, வாதசுரம் நீங்க, சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமம் நமக்கு கிட்டிய பொக்கிஷம். இந்த
யாகத்தில் கலந்துகொண்டு முருகரை வணங்கி வந்தால் வாழுங் காலத்திலேயே பூலோக சுவர்க்கம் காணலாம்.
இறந்தபின் மேலோக
சுவர்க்கமும் அடையலாம் என்பதில் ஐயமில்லை. இத்தகைய
சிறப்பு வாய்ந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுக்கு பாத்திரமாகும்படி
கேட்டுகொள்கிறோம். இந்த தகாவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment