வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
வருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை
அஷ்டமியில்,
உடனடி நிவாரணம் தரும் உன்மத்த பைரவர் யாகத்துடன்
பணம் தரும் பைரவர் யாகம் நடைபெற உள்ளது.
சிவபெருமானுடைய அம்சங்களான பைரவர், வீரபத்திர்ர்,
க்ஷேத்ரபாலகர் ஆகிய மூவரும். கொடிய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை
அழித்தபோது வீரபத்திர்ராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷேத்ரபாலகராகவும்
போற்றப்படுகின்றனர்.
புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ தகவல்கள் இருகின்றன. வன்னி இலை,
சிகப்பு அரளி, முல்லை, போன்ற மலர்கள் இவருடைய பூஜைக்கு மிகவும் சிறப்பானதாகும். பக்தர்களுக்கு
உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.
எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு
அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில்
தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் மனம் ஏங்கும் பக்தர்களுக்கும்,
சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்
மஹா ஹோமமே காலபைரவர் யாகமும் வழிபாடுமாகும். வருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை
அஷ்டமியில், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
மாலை 5.00 மணிக்கு உடனடி நிவாரணம் தரும் உன்மத்த
பைரவர் யாகத்துடன் பணம் தரும் பைரவர் யாகம் அஷ்ட கால மஹாபைரவர் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை
செய்துள்ள அஷ்ட பைரவருக்கும் மஹா காலபைரவருக்கும், பணம் தரும் பைரவரான சொர்ணகால பைரவருக்கும்
அஷ்ட திரவிய அபிஷேகம் செய்து உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை பைரவருக்கு
நிவேதனம் செய்யப்படவுள்ளது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும்
பக்தர்களுக்கு இது ஒரு நிவாரண யக்ஞனமாகும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
இதில்
பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள்,
அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு,
மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில்
பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment