Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, June 27, 2018

Ekadasa Rudra Yagam - Swayamvara Kalaparvathi Yagam - Gandharvaraja Homam - Santhana Gopala Yagam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஏகாதச ருத்ர யாகத்துடன்
 சுயம்வர பார்வதி, கந்தர்வ ராஜ, சந்தான கோபால
ஹோமங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஆனி 13ஆம் தேதி, 27.06.2018 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு உலக நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு சிதம்பரம் தீக்ஷிதர்களை கொண்டு ஏகாதச ருத்ர யாகம் மற்றும் சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் ஆகிய நான்கு ஹோமங்கள் நடைபெற்றது.

இயற்கை வளம், நாடு நலம், மழை வளம் வேண்டியும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உத்யோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மணைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறவும், ஸகல பாவங்களையும் போக்கும் ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம்  நடைபெற்றது. ஸ்ரீருத்ர ஹோமம் செய்வதின் மூலம் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட்டு அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான் என்பது புராணங்கள்.

ஆண் – பெண் திருமணத்தடைகள் நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தைபாக்யம் பெற சந்தான கோபால யாகமும் ஆனி பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு மஹா அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற்றது. மேலும் யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட்பிரசாதம் வழங்கி சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்த யாகத்தில் வாலாஜாபேட்டை, ராமு நர்சிங் ஹோம் நிர்வாகி திரு. டாக்டர் குழைந்தைவேல் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.















No comments:

Post a Comment