வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
சப்த
மாதா பூஜையுடன் நவகன்னிகள் வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்களின் நலன் கருதி
பெண்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும், சாபங்களும் நீங்கி அவர்களின் வேண்டுதல்கள் பூர்த்தியாகி, அம்பாளின் அருள் கடாக்ஷத்துடன் சகல சௌபாக்யம் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழவும்,
ஸப்த மாதா பூஜை நவகன்னி பூஜை, மஹா அபிஷேகம்,
பொங்கல் வைத்து வழிபாடு, சுமங்கலி பூஜை,
கன்யா பூஜை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை
செய்துள்ள நவகன்னிகைகள் மற்றும் அனுசூயா தேவி சன்னதியில் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment