ஸ்ரீ
தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில்
64 பைரவி-பைரவர் ஹோமத்துடன்
மஹா
சண்டீ யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்,
தென்னிந்தியா புரோகிதர் சங்கம் மற்றும்
தன்வந்திரி பீடம் இணைந்து உலக நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் நிகழ்த்திய மாபெரும் மங்கள சண்டி யாகம் 05.06.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும்
மங்கள சண்டீ யாகத்துடன் 64
பைரவி – பைரவர் யாகம் நடைபெற்றது.
முதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை,
மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.
05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள்,
சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜைகள்
நடைபெற்று 06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம், நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம்
துவக்கம்,பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று,
நன்பகல் 2.00
மணிக்கு சண்டிஹோமமஹா பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை
உபசார பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.30
மணி முதல் 64 பைரவி-பைரவர் யாகம், அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும்கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஸ்வாமி ஜிதேஷ்
சுப்ரமண்யம், வன வராகீ உபாசகர் திரு. பாலமுருகன், போரூர் பிரத்யங்கிரா உபாசகர் டாக்டர்
அண்ணாமலை ஸ்வாமிகள், காஞ்சீபுரம் சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள், தென்னிந்திய புரோகித சங்கம்
தலைவர் திரு. வி.சீதாராமன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெங்களூர் தொழிலதிபர்
எம்.ஆர்.சீ. குடும்பத்தினர், திரு.சிரஞ்சீவீ சென்னை, திரு.அருள்மொழி சென்னை மற்றும்
பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment