தடைகளை
தகர்த்து பிரச்சனைகள் தீர்க்கும்
அஷ்ட
ப்ரத்யங்கிரா தேவி மூலமந்திர ஜப மஹா யாகத்துடன்பலன்
தரும் பத்து ஹோமங்கள்
வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டுவருகிற 06.07.2018 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி தடைகளை தகர்த்து பிரச்சனைகள்
தீர்த்து பலன் தரும் பத்து ஹோமங்கள் வருகிற 06.07.2018
வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நண்பகல் 12.00
மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்ரீ மஹா
கணபதி யாகம், சத்ரு சம்ஹார ஷண்முகர் ஹோமம், அஸ்வாரூட பார்வதி யாகம், ஸ்ரீ வாராஹி ஹோமம், ஸ்ரீ சரப ஹோமம், ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ பகளாமுகி ஹோமம், ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம்,
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமம் மற்றும் அஷ்ட ப்ரத்யங்கிரா தேவி
மூலமந்திர ஜப மஹா யாகம் சென்னை,
போரூர் சரப ப்ரத்யங்கிரா தேவி பீடம், தவத்திரு.
டாக்டர். ஸ்ரீ அண்ணாமலை ஸ்வாமிகள் அவர்கள் பங்கேற்று நிகழ்த்த உள்ளார். இந்த யாகத் திருவிழாவில்
பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
யாகத்தின் பலன்கள்:
ஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி,போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன் சுமை நீங்க, வெளியே கொடுத்த
பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு,
ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள்,
மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல விதமான
பிரச்சனைகளுக்கும், 06.07.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியில்
பல்வேறு விதமான மூலிகை பொருட்கள் கொண்டு நடைபெறும் பத்து யாகங்களில் கைங்கர்யம் செய்து
நம்பிக்கையுடன் பங்கேற்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு பரிபூர்ண பலன்
கிடைக்கும் என்கிறார் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள்,
பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment