வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில்
நவாக்ஷரி யாகத்துடன்
தூமாவதீ ஹோமம்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 25.06.2018 திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் உலக நலன் கருதி சாமுண்டி நவாக்ஷரி சகித தூமாவதீ யாகம் நடைபெற்றது.
மஹா லக்ஷ்மி,
மஹா ஸரஸ்வதி, மஹா காளி ஆகிய முப்பெரும் தேவியரின்
கிருபா கடாக்ஷத்தின் மூலமாக கல்வி, செல்வம், ஞானம், ஐஸ்வர்யம், சௌபாக்யம்,
வீரம், மனோபலம், தைரியம்,
புத்திர்பலம் அனைத்தும் பெற இந்த சாமுண்டி நவாக்ஷரி ஹோமமும் துஷ்ட
கிரகங்கள், துஷ்ட சக்திகள், கண்திருஷ்டி,
ஏவல், பில்லி, சூன்யம்,
சத்ருக்கள், எதிரிகள், கண்டங்கள்,
விபத்துக்கள், ஆபத்துக்களை தடுக்க தூமாவதீ ஹோமமும்
நடைபெற்றது. உயர் பதவிகளை அடையவும், சகல காரியசித்தி பெறவும், சத்ரு ஜெயம், காம, குரோத, லோப நாசம்,
பெரும் கஷ்டம், நோய், எதிரி
தொந்தரவு இவற்றிலிருந்து விடுபடவு,ம் நல்ல ஞானம், நற்பண்புகள், நற்குணங்கள், நல்லறிவு
பெற்று விளங்கவும் இந்த யாகத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மேலும்
இந்த யகத்தில் பங்கேற்ற பக்தர்களை பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அசிர்வதித்து அருட்பிரசாதம்
வழங்கினார். இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment