வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
தன்வந்திரி
பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 23.06.2018
சனிக்கிழமை
ஏகாதசி திதியை
முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி
அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் இப்பூஜையில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு
உண்டான தடைகள் நீங்கி சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழவும், நிம்மதியான தூக்கம் வேண்டியும், துன்பங்கள் துயரங்கள்
அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக
பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு நெல்லிப்பொடி அபிஷேக
தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்ட்து.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment