வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
பெண்களின்
ருது தோஷம் நீங்கி சகல சௌபாக்யம் பெற
சப்த
மாதா பூஜையுடன் நவகன்னிகள் வழிபாடு.
வருகிற
17.06.2018 ஞாயிற்றுக்கிழமை
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்களின் நலன் கருதி
பெண்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும், சாபங்களும் நீங்கி அவர்களின் வேண்டுதல்கள் பூர்த்தியாகி, அம்பாளின் அருள் கடாக்ஷத்துடன் சகல சௌபாக்யம் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ,
ஸப்த மாதா பூஜை நவகன்னி பூஜை, மஹா அபிஷேகம்,
பொங்கல் வைத்து வழிபாடு, சுமங்கலி பூஜை,
கன்யா பூஜை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை
செய்துள்ள நவகன்னிகைகள் மற்றும் அனுசூயா தேவி சன்னதியில் நடைபெற உள்ளது.
பெண்களை தெய்வமாக வழிபடுவது பாரத தேசத்தில் பழங்காலம்தொட்டே
இருந்துவரும் வழக்கம்.
இதில் சக்தி வழிபாடு மிகவும் பொற்றுதலுக்குரிய ஒரு சிறந்த வழிபாடாகும். இவை
இப்பாரத தேசத்தில் அனைவராலும் ஏற்றுகொள்ளப் பட்டதாகும். பன்னெடுங்காலமாக வணங்கி
வழிபட்டு போற்றப்பட்டு வரும்,
தாய் தெய்வ வழிபாட்டிற்கும், சக்தி தத்துவ
பெருமைக்கும், தேவி ஒருத்தியே வடிவங்கள் பல தாங்கி மனித
குலத்திற்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி, கருணை மழை பொழியும்
தாய்மையின் உருவமாக கொண்டாடப்பட்டதே சப்த மாதர், சப்த
மங்கையர், சப்த கன்னியர், நவகன்னிகள்
வழிபாடாகும்.
அன்னை பராசக்தியின் கன்னி வடிவம் தான் நவகன்னிகளும், சப்த மாதாக்களும்.
அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவான பிராம்மி,
மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி,
வராஹி, இந்திராணி, சாமுண்ட
இவர்கள் சப்த மாதாக்கள் என்றும் கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோகினி, காஸிகா, சண்டிகா, சாம்பவி, சுபத்ரா, துர்கா இவர்கள் நவகன்னிகள் என்றும்
போற்றி வணங்குகிறது.
இவர்களை பூஜை செய்வதின் மூலம் வாழ்கையில் நல்ல பலன்களை பெறலாம். ருது ஆகாத பெண்கள் ருதுவாகும், திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு சகல தடைகளும் நீங்கி திருமணம் நடைபெறும்,
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும், சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகி
நன்மைகள் உண்டாகும், குடும்ப கஷ்டங்கள் நீங்கி செல்வம் கொழிக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இப்பூஜையில்
பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment