ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்அமாவாசை
யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இன்று 13.06.2018 புதன் கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் அமாவாசை யாகம்
நடைபெற்றது.
உலகத்தில்
இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் ‘திருஷ்டி’
எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த
திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை
இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி
சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன.
இத்தகைய
திருஷ்டி ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொள்வதால், இருக்கிற திருஷ்டி அகல்வதோடு ராகு திசை நடப்பவர்களுக்கும் ராகு
புக்தியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று அருள்
பெறலாம்.மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம்
நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும்,
மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த யாகத்தில் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில்
செஞ்சி தாலுக்கா நல்லான்பெற்ற பிள்ளை கிராமத்தில் உள்ள தவத்திரு.
சிவஜோதி மோன சித்தர் அவர்கள் மற்றும்
சென்னை மஹா காலபைரவர் ஞனபீடம் ஸ்வாமிகள் வருகை புரிந்து சிறப்பித்தனர்.
இந்த
யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம்,
மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து மஹாபூர்ணாஹூதியுடன் மஹிஷாசுர மர்த்தினிக்கு
சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment