ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 24.06.2018, ஞாயிற்றுக்கிழமை
அரசு வேலை, சொத்து சுகங்கள், புகழ், அந்தஸ்து, உயர் பதவி, மதிப்பு கிடைக்க இந்திராஸ்திர
ஹோமம்
நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 24.06.2018 ஞாயிற்றுக்
கிழமை, காலை 10.00 மணி முதல் 1.00
மணி வரை வளர்பிறை துவாதசி
திதியில் தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெற இந்திராஸ்திர ஹோமம், பீடத்தின் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நடைபெற உள்ளது. பூர்வ
புண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பும்,
ஒருவருக்கு நன்முறையில் அமைந்தால் இந்திர பதவிக்கு நிகரான பதவி வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்கிறது புராணங்கள்.
இந்த யாகம் தகுதி அடிப்படையில் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் அரசுப்
பணியாளர்கள் உயர்பதவி
பெறவும், தடை செய்து வைத்திருக்கும் பதவி உயர்வை திரும்பப் பெறவும், பணி இடமாற்றத்தால் ஏற்படும் மனச்சங்கடங்கள் நீங்கவும், குடும்பத் தலைவனின் புகழ், அந்தஸ்து உயர்வடைந்து குடும்பம் மேன்மை அடையும், குடும்பத்தில் மதிப்பு உயரவும், பணிகளில் உள்ளவர்களுக்கும் அலுவலகத்தில்
உள்ளவர்களுக்கும் ஏற்படும் எதிர்ப்புகள் விலகவும், சொத்து சுகங்களை இழந்து தவிப்பவர்களுக்கு வாழ வழி
பிறக்கவும் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் வெண்தாமரை, நெய், நாயுருவி, வெண்கடுகு, புரசு சமித்து,
வெற்றிலை, உப்பு, நீரில் நனைத்த கொள்ளு, சர்க்கரை பொங்கல், தும்பை, அருகம்புல் மற்றும் விசேஷ திரவியங்களும், பட்டு வஸ்திரங்களும் சேர்க்கப்பட
உள்ளது. இதனை தொடர்ந்து வாஸ்து பகவான் பீட்த்தில் உள்ள இந்த்ர தேவனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment