வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில்
வருகிற 01.07.2018
ஞாயிற்றுக்கிழமை மாலை
உள்ளம் அமைதி பெற, உச்சிஷ்ட கணபதி யாகம்.
விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் எட்டாவதாக விளங்குவது உச்சிஷ்ட கணபதி ரூபமாகும். உச்சிஷ்ட கணபதி
பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் உள்ளது. இருந்தாலும் ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள அபூர்வமான
கோலமே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.
படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் போன்ற ஐந்து கரண நிலையும் ஒரு
பெண்ணின் உடலில் தான் உள்ளது என்பதை உணர்த்துபவர் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியாகும். உச்சிஷ்ட கணபதி நீல சரஸ்வதி சமேதராக எழுந்தருளியிருப்பார்.
உச்சிஷ்ட என்றால் எச்சம் என்பது பொருள். நாம் எதை உண்டாலும் வாயில் மீதம் உள்ளது எச்சம் தான். இவ்வுலகில் எது இருந்தாலும் இல்லையானாலும் மிஞ்சி இருப்பதும்
எப்போதும் இருப்பதும் பிரம்மம்தான். அந்த மிஞ்சி இருக்கும் பிரம்ம சக்திக்கே
உச்சிஷ்ட என்று பொருள். அதோடு உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே உயர்வானது என்று
மற்றொரு பொருளும் உண்டு. மாயையான இந்த உலகை நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது
இந்த உச்சிஷ்ட கணபதி எனும் பிரம்மம்தான். சுத்தம் அசுத்தம் என்ற இருவேறு நிலைகளை
கடந்தவரே உச்சிஷ்ட கணபதி
என்கிறது புராணங்கள்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 04.20 மணிக்கு உலக நலன் கருதி உச்சிஷ்ட கணபதி
யாகம் நடைபெற உள்ளது.
உச்சிஷ்ட கணபதி யாகத்தின்
மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், குழந்தையில்லாதவர்களுக்கு
குழந்தை பிறக்கும், குபேர லக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைக்கும்,
தீர்வு இல்லா கடன் பிரச்சனைகள் தீரும், எதிரிகள் ஓடி ஒளிவர், வியாபாரம் செழிக்கும்,
தொழில் சிறக்கும், விவசாயம் பெருகும், உத்யோகத்தில் முன்னேற்றம் பெறலாம், தடைபெற்ற
காரியங்கள் விரைவில் நடைபெறும், செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக
சித்திகள் கைகூடும்
இழுபறியாக உள்ள வழக்குகள் விரைவில்
முடியும் போன்ற பல்வேறுவிதமான நற்செயல்களில் இந்த ஜப ஹோமத்தின் மூலம் நன்மை பெறலாம்.
இந்த யாகத்தில்
பட்டு வஸ்திரம், நெய், தேன், கொப்பரை, நெல்ப்பொரி, அவல், கரும்பு, வெல்லம், வறுகடலை,
அப்பம், அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்கள், வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய், கருங்காலி, நாயுருவி
போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடுமபத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment