வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து
நாளை முன்னிட்டு உலக நலன் கருதி நாளை 06.03.2017 திங்கட் கிழமை காலை
10.00 மணிமுதல் 1.00 மணி வரை வாஸ்து சாந்தி பூஜையும் ஹோமமும் நடைபெறுகிறது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து
சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள்
அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி
மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள்,
பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி
குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக்
கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும்
வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமம், பஞ்சபூதம் அஷ்ட்டதிக்
பாலகர் பூஜையும் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து
யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து
பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை
விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment