வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று சஷ்டியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது.
உலக மக்கள் சத்ரு பயமின்றி நீங்கவும் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் எதிரிகள் தொல்லை
நீங்கவும், இரத்த புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள்
வராமல் தடுக்கவும், தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கவும்,
பூமியினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், உடலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் நீங்கவும், திருமணத் தடைகள், உத்யோக தடைகள், குழந்தையின்மை போன்றவைகள் நீங்கவும், பெற்றோர்கள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல ஆரோக்யம் கிடைக்க
தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட யாகம் இன்று விசேஷமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும்,கூட்டு ப்ரார்த்தனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment