Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, March 15, 2017

சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி யாகத்துடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பிடத்தில் 16.03.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமமும் மாலை 5.00 மணிக்கு  சங்கடம் தீர்க்கும்
சங்கடஹர சதுர்த்தி ஹோமம்  நடைபெறுகிறது.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.  ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் மரண பயம் நீங்கும். அடித்தகை பிடித்த பெருமாள்என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்என்று இதற்கு பொருள். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் ஏவல், சத்துரு பயம், மரணபயம், உடற்கோளாறு நீங்கும், தம்பதிகள் ஒற்றுமை ,பணப்பிரச்சினைகள் நீங்கும்.

சங்கடஹர சதுர்த்தி யாகம்

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து ஹோம பூஜைகளில் கலந்து கொள்பவர்கள் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றி பெறலாம்..

யாகத்தில்கரும்பு,அருகம்புல்,நெல்பொரி,அவல்,வறுகடலை,கொப்பரை,வெல்லம்,எள்,நெய்,வெண்பட்டுபோன்றவை சேர்க்கப்பட உள்ளது.
ஹோமத்தின் பலன்கள் ஹோமத்திலும் அபிஷேகத்திலும் சிறப்பு பூஜையில் பங்பேற்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள்  இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்கிறார். கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தேரிவித்தனர்.


No comments:

Post a Comment