வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் யுகாதியை முன்னிட்டு
காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவர்
தன்வந்திரிக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன்
பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து தன்வந்திரி
மூலவருக்கு நெல்லிக் காய் பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
ஹோமத்தில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ
சிறப்பு கூட்டு
பிரார்த்தனை நடைபெற்றது.
பங்கேற்ற பக்தர்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அதாவது
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும்
வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி
பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம்
ஆகிய 6 சுவை கொண்ட யுகாதி பச்சடி செய்து
சுவாமிக்கு நிவேதனம்
செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர்
முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment