வாக்கியப்பஞ்சாங்கப்படி ஹேவிளம்பி கார்த்திகை மாதம் 29;ம் நாள் (15.12.2017) அன்று விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசியில் சனிப் பெயர்ச்சி
நடை
பெறுகிறது.அதனை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தினத்தில் சனிப்
பெயர்ச்சி மஹா யாகம் அதி விமர்சியாக
நடைபெற உள்ளது.
அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம்,
சனிப்பெயர்ச்சி பலன்கள்
1.
மேஷம். சனி கஷ்ட ஸ்தானமான எட்டாமிடத்திலிருந்து
விடுதலையாகி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு வருகிறார். (,இதனால் உங்களுக்கு கடுமையான அஷ்டமத்துச் சனியின் காலம் முடிவடைந்து விடுகிறது.
2.
ரிஷபம் சனி களத்திர ஸ்தானமான ஏழாமிடத்திலிருந்து பெயர்ந்து கஷ்ட ஸ்தானமான எட்டாமிடத்திற்கு
வருகின்றனர். (இதனால் கண்டச்
சனியின் காலம் முடிவடைந்து அஷ்டமத்துச் சனியின் காலம் தொடங்குகிறது.
3.
மிதுனம் சனி அனுகூலமான ஆறாமிடத்துப் பயணத்தை முடித்துக் கொண்டு களத்திர ஸ்தானமான ஏழாமிடத்துக்குச்
செல்கிறார்.இதனால் கண்டச்
சனியின் காலம் ஆரம்பமாகிறது.
4.
கடகம் சனி புத்தி ஸ்தானமான ஐந்தாமித்து சஞ்சாரத்தை நிறைவு செய்து தான் வலிமை பெறக்கூடிய
ஸ்தானமான ஆறாமிடத்திற்கு வருகை தருகிறார்.
5.
சிம்மம் சனி சுக ஸ்தானமான நான்காமிடத்திலிருந்து நகர்ந்து புத்தி ஸ்தானமான ஐந்தாமிடத்திற்கு
வருகிறார். (இதனால் அல்லலான
அர்த்தாஷ்டமச் சனியின் காலம் முடிவடைகிறது.
6.
கன்னி சனி தைரிய ஜெய ஸ்தானமான மூன்றாமிடத்திலிருந்து மாறி சுகஸ்தானமான நான்காமிடத்திற்கு
வருகிறார் இதனால் அர்த்தாஷ்டமச் சனியின் காலம் ஆரம்பமாகிறது.
7.
துலாம் சனி குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திலிருந்து விடுபட்டு தைரிய ஜெய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு
வருகிறார் இதனால் உங்களுக்கு ஏழரை வருடங்களாக தடை பெற்றுக் கொண்டிருந்த ஏழரை சனியில்
மூன்றாம் பகுதியான பாதச் சனி (குடும்பச் சனி) பகுதியுடன் ஏழரைச் சனியின் முழுக் காலமும் முடிவடைகிறது
8.
விருச்சிகம் சனி உங்கள் ஜென்ம ராசியிலிருந்து விலகி குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு வருகிறார். இதனால் ஏழரைச் சனியின் நடுப்பகுதியான
ஜென்ம சனியின் காலம் முடிவடைந்து அடுத்து ஏழரைச்சனியில் மூன்றாம் பகுதியான பாதச் சனி
(குடும்பச் சனியின் காலம் தொடங்குகிறது.ஆகவே ஏழரைச்
சனியில் இன்னும் இரண்டரை ஆண்டுக் காலம் மிதமுள்ளது)
9.
தனுசு சனி விரய ஸ்தானமான பன்னிரண்டாமிடத்தை விட்டு நீங்கி உங்கள் ஜென்ம ராசியிலேயே குடியேறுகிறார். (இதனால் ஏற்கனவே ஆரம்பித்து
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழரைச் சனியின் முதல் பகுதியான விரயச் சனியின் காலம் முடிந்து
நடுப்பகுதியான ஜென்மச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. எனவே ஏழரைச்
சனியில் இன்னும் ஐந்தாண்டு காலம் மீதம் இருக்கிறது.)
10. மகரம் சனி லாபஸ்தானமான பதினோராமிடத்திலிருந்து அகன்று
விரயஸ்தானமான பன்னிரண்டாமிடத்திற்கு வருகிறார்..இதனால் உங்களுக்கு ஏழரைச் சனியின் காலம் ஆரம்பமாகிறது.அதில் முதல் பகுதியான விரயச் சனியின் காலக் கட்டமும் தொடங்குகிறது.
11. கும்பம் சனி காரிய ஸ்தானமான பத்தாமிடத்திலிருந்து
விடுபட்டு லாப ஸ்தானமான பதினோராமிடத்திற்கு வருகை தருகிறார்.
12. மீனம் சனி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திலிருந்து
நகர்ந்து காரியஸ்தானமான பத்தாமிடத்திற்கு வந்து சேருகிறார்.
மேற்கண்ட சனிப் பெயர்ச்சி மஹா
யாகத்தல் பங்குபெற விரும்புவோர்
கீழ்கண்ட முகவரியில் தொடர்பு
கொள்ளவும்.
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஸ்தாபகர்,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீம், கீழ்புதுப்பேட்டை,அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம்.632513
E.MAIL. danvantripeedam@gmail.com தொடர்புக்கு
9443330203
No comments:
Post a Comment