வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து
நாளை முன்னிட்டு இன்று
06.03.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும்
ஹோமமும்
நடைபெற்றது.
மக்கள் வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து
சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள்
அமைத்துக் கொள்ளவும்,பழைய வீடுகளை
புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள்,
பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி
குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக்
கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் பிரார்த்தனை செய்யப்பட்டது,
இதில் வாஸ்து ஹோமம், பஞ்சபூதம் அஷ்டதிக் பாலகர் பூஜையும் நடைபெற்று. ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து
யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து
பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை
விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தனர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment