வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைபடி உலக நலன் கருதி பல்வேறு
வகையான ஹோமஙகள் நடைபெற்றது.
தேய்பிறை
அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற
இந்த ஹோமத்தில் பங்கேற்றவர்கள் சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள்
அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும்,
சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும்,
மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் வெண்கடுகு, வால் மிளகு, வேப்பெண்ணையை கொண்டு சூலினி துர்கா ஹோமம், ஆயுள் ஹோம்ம் மிருத்திஞ்சய ஹோமம்
நடைபெற்றது. இதனை முதல் இரவு
7.00 மணி வரை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகம் மற்றும் சொர்ண ஆகர்ஷ்ண
பைரவர் யாகம் நடைபெற்றது.
No comments:
Post a Comment