வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள
ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி
இன்று சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை குழந்தை பாக்கியம்பெற
வேண்டி சந்தான கோபால யாகம் நடைபெற்றது..
பெண்களின்
பிரசவத்திற்கு பலவகையான உபாயங்கள்உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால்
மகப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .ஸ்ரீசந்தான கோபாலஹோமத்தில் தம்பதிகள் பங்கேற்றனர். மேலும் இந்த
யாகத்தில் பங்கேற்ற தம்பதிகள் குழந்தை பெற்று நன்மைகளைபெற இந்தஹோமத்தில்
பிரார்த்தனைசெய்தனர்... மேலும், பெண் கருத்தடை
பிரச்சனைகள் தீரவும். எந்த பிரச்சனையும் இல்லாமல், குழந்தை பிறக்கவும் நாகதோஷம் மற்றும் கர்ம
பிரச்சினைகள் இருந்து விலகவும் ஜாதகத்தில் கிரகங்களால்
ஏற்படும் எதிர்மறை விளைவுகளை அகற்றவும் கர்ப்பிணி
பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக்கூடிய அபாயத்தைக்குறைக்கவும். உடலில் சக்தி வாய்ந்த ஆற்றலை பெறவேண்டியும். நல்லகுணங்களுடன், குழந்தைக்கு வரம் வேண்டி இந்த ஹோமம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஸ்ரீ
கார்திகைகுமரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வெண்ணைய் பிரசாதம் வழங்கப்பட்டது.
பங்கேற்ற அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்...இந்ததகவலைதன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment