வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பிடத்தில்
இன்று வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
ஹோமமும் சங்கடம் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி ஹோமம் நடைபெற்றது.
எதிரிகளை
வெல்லும் பலம் கிடைக்க. மரண பயம் நீங்கவும். ஏவல், சத்துரு
பயம், உடற்கோளாறு நீங்கவும் தம்பதிகள் ஒற்றுமைக்கும்
,பணப்பிரச்சினைகள் நீங்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது..
சங்கடஹர
சதுர்த்தி யாகம்
சங்கடங்கள் அனைத்தும் தீரவும் சகல சௌபாக்கியங்கள் பெறவும் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி
எல்லா காரியங்களிலும் வெற்றி பெறவும் நீண்ட நாட்களாக
தீராமல் உள்ள நோய்தீரவும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான
சந்தோஷத்தை அடையவும் மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை பெறவும். சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்...இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தேரிவித்தனர்.
No comments:
Post a Comment