வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 25.03.2017 சனிக் கிழமை சனி பிரதோஷத்தை முன்னிட்டு
மாலை 5.00 மணிக்கு
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது..இதில் பால்,தயிர்,பழம்சந்தனம், பன்னீர் இளநீர்,
கொண்டு மஹா அபிஷேகமும் வில்வ இலைகளாலும், வன்னி
இலைகளாலும் அர்ச்சனையும் நடைபெற்று மஹா தீபாரதனையுடன் சங்குதீர்த்தப் பிரசாதமும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது.சங்காபிஷேகத்தில் பங்கேற்றவர்கள் இறைவன் அருளால் பக்தி
கிடைத்து மன அமைதி பெறவும் .ஐஸ்வர்யங்கள் வேண்டியும், சகல விதமான நோய்கள் அகலவும்,.கங்கா தேவியின் ஆசி கிடைக்கவும்,.நவகிரகங்களால் ஏற்படும்
தோஷங்கள் குறையவும் நந்தி தேவனையும், ஈஸ்வரனையும் ப்ரார்த்தனை
செய்தனர்..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்தெரிவித்தனர்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment