Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, March 27, 2017

தன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) பண்டிகையை முன்னிட்டு புதன் கிழமை 29.03.2017 சிறப்பு தன்வந்திரி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை  தன்வந்திரி பீடத்தில் யுகாதியை முன்னிட்டு 29.03.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழு‌ம் ம‌க்‌க‌ள்  த‌ங்களது பு‌த்தா‌ண்டு ‌பிற‌ப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வரு‌கி‌ன்றன‌ர். ஆண்டின் தொடக்க‌த்தையே யுகாதி என்று அழைக்‌கிறா‌ர்க‌ள்.
த‌மிழ‌ர்க‌ள் த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடுவது போலவே    ஆ‌ந்‌திர, க‌ர்நாடக ம‌க்களு‌ம் த‌ங்களது பு‌த்தா‌ண்டை கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர். அ‌ன்று அதிகாலையில் எழுந்து வாச‌லி‌ல் வ‌ண்ண‌க் கோல‌மி‌ட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வ‌ழிபடுவா‌ர்க‌ள்.
இ‌தி‌ல் ஒரு ‌சிற‌ப்ப‌ம்ச‌ம் எ‌ன்னவெ‌ன்றா‌ல் வா‌ழ்‌க்கை‌யி‌ன் த‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் ‌விதமாக யுகா‌தி ப‌ச்சடி எ‌ன்ற ஒரு உணவை தயா‌ரி‌ப்பா‌ர்க‌ள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவா‌ர்க‌ள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு டையல் இட்டு சூரியனை வழிபடுவா‌ர்க‌ள்.மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நாளை அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன.இதனை தொடர்ந்துதன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.


இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment