வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைபடி உலக நலன் கருதி சூலினி
துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ காலபைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவர் யாகம் நடைபெற உள்ளது.
சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள்
அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும்,
சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும்,
மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாளை
காலை 10.00 மணியளவில் 1.00 மணி வரை வெண்கடுகு, வால் மிளகு, வேப்பெண்ணையை கொண்டு சூலினி துர்கா
ஹோமம், ஆயுள் ஹோம்ம் மிருத்திஞ்சய
ஹோமம் நடைபெறுகிறது இதனை தொடர்ந்து ஸ்ரீமகிஷாசுரமர்த்தனிக்கு
சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகம் மற்றும் சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் நடைபெறும்.
இந்த பிரபஞ்சத்தில் வாழும் சகல
ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கும் நவ கிரகங்களும்
காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும். காலச் சக்கரத்தில் சிக்கி துன்புறும்
பக்தர்களை காப்பாற்றுவதால் ஆபத்தாரணர் என்று போற்றி புகழப்படுகிறார். காலத்தின்
கட்டுப்பாட்டை கடந்து துன்பப்படும் பக்தர்களுக்கு நன்மை செய்பவர் காலபைரவர் ஆவார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குபவர் என்றும் பொருள். காலபைரவர்
சட்டநாதர், மகா காளர், பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
அடியார்களுடைய பயத்தை போக்குவதும் அடியார்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவரும்
இவரது அருள்பாலிக்கும் செயல்களாகும்.
பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண
ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். தொழில்
உள்ள இறங்குமுகம், வாராக்கடன், போன்ற பல இன்னல்கள் நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரலாம், உயர் பதவி கிடைக்கும்.
வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு
பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என
இவர் அழைக்கப்படுகின்றார்.
தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே
உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம். சிரத்தையான
உண்மையான வழிபாடு மூலம் பலனை உடனே அடையலாம்.
ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை சொர்ண ஆகர்ஷ்ண பைரவர்,
அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகமும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
.இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment