Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, March 27, 2017

அமாவாசை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நெய் மிளகாய் யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் காலை அமாவாசையை முன்னிட்டு  இன்று 27.03.2017 பித்ரு தோஷம் நீங்க  பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமமும் தொடர்ந்து  ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி,ஸ்ரீ பட்டாபிஷேகராமர் மற்றும்
ஸ்ரீ ராகுகேதுவிற்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற்றது.
மேலும் அமாவாசை என்பதால் நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சூலினிப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமமும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்கும்ம், மஞ்சள் மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பித்ரு தோஷம் நீங்கவும்,.  தடைபட்ட திருமணம் நடைபெறவும்..

வாழ்வு மலரவும். தம்பதியரிடையே அன்னியோன்னியம்ஏற்படவும். குழந்தை பாக்கியம்வேண்டியும். கடுமையான உடல் உபாதைகள் நீங்கவும்., மனநோய் அகலவும் முறையான திருமணம் நடைபெற வேண்டியும் ஆண் வாரிசு ஏற்படவும். துர்மரணம் நிகழாமல் இருக்க வேண்டியும் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி நன்மைகள்பெற  ஹோமங்களில்  பக்தர்கள் யாக குண்டத்தை வலம் வந்து  பிரார்த்தனை செய்தனர்.இந்த ஹோமத்தில் அனந்தலை முன்னாள் தலைவர் திரு.வெங்கடேசன் வாலாஜா திருமதி. சுகன்யா மோகன் ராம் மற்றும் நகர, கிராமமக்கள் கலந்து கொண்டனர்.  .இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.














No comments:

Post a Comment