கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Wednesday, March 1, 2017
தன்வந்திரி பீடத்தில் மழை வேண்டி மகேஸ்வர ஹோமம் 04.03.2017 சனிக்கிழமை மாலை 4.00மணி முதல் 05.03.2017 மதியம் 2.00 மணிவரை.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் மண்வளம் மழைவளம் வேண்டியும் பொன்\
வளம் பொருள் வளம் வேண்டியும் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைப்படி தட்சிண கர்நாடகா கோகர்ணா ஷேத்திரத்தை சேர்ந்த
பண்டிட் திரு. சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்கள் பங்கேற்று உலக
நலன் கருதி பல்வேறு வகையான நாளும் நன்மைதரும் ஹோமங்கள் நடைபெற
உள்ளன.
நாம்
வாழும் ஊர்களில் வசிக்கும் இல்லங்களில் ஏற்படுகின்ற தொல்லைகள் அகலவும் பஞ்சபூதங்களால்
பலவிதமான நன்மைகள் பெறவும்.
பஞ்சபூத தெய்வங்களின் பெருமைகளை தெரிந்து கொண்டு அவர்களை வழிபட்டு பலன்கள்
பெறவேண்டியும் வாஸ்து பகவானுடைய அருள்பெற்று வாஸ்து தோஷ தடைகள் ஏற்படாமல் இருக்க அஷ்டதிக்
பாலகர் பூஜையும் வாஸ்து தோஷ நிவர்த்தி பூஜையும் ஹோமமும் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment