வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் மழைவேண்டி டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தட்சிண கர்நாடகா
கோகர்ணா ஷேத்திரத்தை சேர்ந்த திரு. சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் 10க்கும் மேற்பட்ட
ஆச்சாரியர்கள் பங்கேற்று உலக நலன் கருதி ஸ்ரீ
வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், அஷ்டதிக் பாலகர் பூஜையும் வாஸ்து தோஷ
சாந்தியும், தன ஆகர்ஷண, ஐன ஆகர்ஷண பூஜை
மற்றும் ஹோமங்கள், ருத்ர ஹோமம், நடைபெற்றன.
.
நேற்று 04.03.2017 மாலை 4.00 மணிக்கு மேல் யாகசாலை பூஜை மற்றும் கலசபூஜையுடன் ஆராதனையும் நடைபெற்றன
இன்று 05.03.2017 மேற்கண்ட யாகங்கள் 2.00 மணிவரை நடைபெற்றன.. இறுதியாக மஹாபூர்ணாஹீதியும் நடைபெற்றது. இந்த யாகத்தில் அனைத்து பக்தர்களும்
கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின். அருளைப் பெற்றனர். இதனை தொடர்ந்து
அன்னதானமும் நடைபெற்றது.இந்த யாகத்தில் சிறப்பு
விருந்தினராக அமெரிக்க நீயுஜெர்சியில் உள்ள
இராஜ கணபதி ஆலயத்தின் பீடாதிபதி கே.எஸ் தீட்சிதர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment