கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, March 30, 2017
Wednesday, March 29, 2017
தன்வந்திரி பீடத்தில் யுகாதி விழா நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் யுகாதியை முன்னிட்டு
காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவர்
தன்வந்திரிக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன்
பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து தன்வந்திரி
மூலவருக்கு நெல்லிக் காய் பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
ஹோமத்தில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ
சிறப்பு கூட்டு
பிரார்த்தனை நடைபெற்றது.
பங்கேற்ற பக்தர்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக அதாவது
வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும்
வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி
பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம்
ஆகிய 6 சுவை கொண்ட யுகாதி பச்சடி செய்து
சுவாமிக்கு நிவேதனம்
செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர்
முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
Tuesday, March 28, 2017
தன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாகம்
வேலூர்
மாவட்டம வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆக்ஞைப்படி குழந்தைவரம் வேண்டி வருகிற 01.04.2017 சனிக் கிழமை காலை 10.30 மணியளவில் வளர்பிறை சஷ்டியை
முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகத்துடன்
சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு
சிறப்பு அபிஷேகத்துடன் வெண்ணைய் காப்பு நடைபெற்று
தம்பதிகளுக்கு வெண்ணைய் பிரசாதத்துடன் தைல பிரசாதமும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்க உள்ளார்..
தன்வந்திரி
பீடத்தில் கார்த்திகை குமரனுக்கும் நவநீத கிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளதால்
தம்பதிகளுக்கு மேற்கண்ட தெய்வங்களின்
அருள்
கிடைத்து குழந்தைபாக்கயம் விரைவில் ஏற்பட சஷ்டி விரதத்துடன்
இந்த ஹோமம்
நடைபெற உள்ளது.
சஷ்டி
விரத மகிமை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
என்பது பழமொழி. இது தவறா னது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான்
உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம்
முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய
கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை
உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி
ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன்.
இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும்
சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும்
பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே
குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு
சஷ்டி
விரதம் இருந்து சந்தான கோபால யாகத்தில் கலந்து கொண்டு பிரசாதமாக வழங்கும் தைலத்தை தம்பதிகள்
உண்டு, வயிற்றில்
தடவி வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும். என்கின்றனர்
தன்வந்திரி குடும்பத்தினர்
Monday, March 27, 2017
அமாவாசை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நெய் மிளகாய் யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் காலை அமாவாசையை
முன்னிட்டு இன்று 27.03.2017 பித்ரு தோஷம் நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி
ஹோமமும் தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி,ஸ்ரீ பட்டாபிஷேகராமர் மற்றும்
ஸ்ரீ ராகுகேதுவிற்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற்றது.
மேலும் அமாவாசை என்பதால் நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா
சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சூலினிப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமமும்
ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்கும்ம், மஞ்சள் மற்றும்
பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பித்ரு தோஷம் நீங்கவும்,. தடைபட்ட
திருமணம் நடைபெறவும்..
வாழ்வு மலரவும். தம்பதியரிடையே அன்னியோன்னியம்ஏற்படவும். குழந்தை பாக்கியம்வேண்டியும். கடுமையான உடல் உபாதைகள் நீங்கவும்., மனநோய் அகலவும் முறையான திருமணம் நடைபெற வேண்டியும் ஆண் வாரிசு ஏற்படவும். துர்மரணம் நிகழாமல் இருக்க வேண்டியும் போன்ற
பல்வேறு தோஷங்கள் நீங்கி நன்மைகள்பெற ஹோமங்களில் பக்தர்கள் யாக குண்டத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்தனர்.இந்த
ஹோமத்தில் அனந்தலை முன்னாள் தலைவர் திரு.வெங்கடேசன் வாலாஜா திருமதி. சுகன்யா மோகன்
ராம் மற்றும் நகர, கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஏப்ரல் 05 ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தல் ஸ்ரீராம நவமி விழா
ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம
நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர்.
அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி
திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான்.
தன்வந்திரி பீடத்தில் உலகில்
வேறெங்கும் இல்லாதவாறு 14 தெய்வங்களுடன்
காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு 05.04.2017 புதன் கிழமை
காலை 10.00 மணியளவில்
ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக
ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனை நடைபெற உள்ளது. மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம்,
நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக
சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பின்னர் நைவேத்யப் பொருட்களைக்
குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர்
பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும்
தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப்
படைக்கப்படுகின்றது.
காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல்
ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின்
அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும்,
குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். ஸ்ரீபட்டாடிபஷேக ராமர் ஹோமம் நடைபெற
உள்ளது.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ
பட்டாபிஷேக ராமரை வழிப்பட்டு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெற மேற்கண்ட பூஜையிலும்,
யாகத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) பண்டிகையை முன்னிட்டு புதன் கிழமை 29.03.2017 சிறப்பு தன்வந்திரி ஹோமம்
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி
பீடத்தில் யுகாதியை முன்னிட்டு 29.03.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு
தன்வந்திரி ஹோமமும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களது புத்தாண்டு பிறப்பை யுகாதி என்ற
பெயரில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.
தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது
போலவே ஆந்திர, கர்நாடக மக்களும் தங்களது புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அன்று
அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை
அணிந்து, இறைவனை வழிபடுவார்கள்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால்
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு
உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு
மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில்
பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.
யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள்.மாலையில் வாசலில் விளக்கேற்றிய
பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை
முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் நாளை அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு
தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான
புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன.இதனை தொடர்ந்துதன்வந்திரி மூலவருக்கு சிறப்பு
அபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர்
முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
Saturday, March 25, 2017
தன்வந்திரி பீடத்தில் 108 சங்காபிஷேகத்துடன் சனி பிரதோஷம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 25.03.2017 சனிக் கிழமை சனி பிரதோஷத்தை முன்னிட்டு
மாலை 5.00 மணிக்கு
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது..இதில் பால்,தயிர்,பழம்சந்தனம், பன்னீர் இளநீர்,
கொண்டு மஹா அபிஷேகமும் வில்வ இலைகளாலும், வன்னி
இலைகளாலும் அர்ச்சனையும் நடைபெற்று மஹா தீபாரதனையுடன் சங்குதீர்த்தப் பிரசாதமும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது.சங்காபிஷேகத்தில் பங்கேற்றவர்கள் இறைவன் அருளால் பக்தி
கிடைத்து மன அமைதி பெறவும் .ஐஸ்வர்யங்கள் வேண்டியும், சகல விதமான நோய்கள் அகலவும்,.கங்கா தேவியின் ஆசி கிடைக்கவும்,.நவகிரகங்களால் ஏற்படும்
தோஷங்கள் குறையவும் நந்தி தேவனையும், ஈஸ்வரனையும் ப்ரார்த்தனை
செய்தனர்..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்தெரிவித்தனர்.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகம்.
வாக்கியப்பஞ்சாங்கப்படி ஹேவிளம்பி கார்த்திகை மாதம் 29;ம் நாள் (15.12.2017) அன்று விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசியில் சனிப் பெயர்ச்சி
நடை
பெறுகிறது.அதனை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தினத்தில் சனிப்
பெயர்ச்சி மஹா யாகம் அதி விமர்சியாக
நடைபெற உள்ளது.
அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம்,
சனிப்பெயர்ச்சி பலன்கள்
1.
மேஷம். சனி கஷ்ட ஸ்தானமான எட்டாமிடத்திலிருந்து
விடுதலையாகி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு வருகிறார். (,இதனால் உங்களுக்கு கடுமையான அஷ்டமத்துச் சனியின் காலம் முடிவடைந்து விடுகிறது.
2.
ரிஷபம் சனி களத்திர ஸ்தானமான ஏழாமிடத்திலிருந்து பெயர்ந்து கஷ்ட ஸ்தானமான எட்டாமிடத்திற்கு
வருகின்றனர். (இதனால் கண்டச்
சனியின் காலம் முடிவடைந்து அஷ்டமத்துச் சனியின் காலம் தொடங்குகிறது.
3.
மிதுனம் சனி அனுகூலமான ஆறாமிடத்துப் பயணத்தை முடித்துக் கொண்டு களத்திர ஸ்தானமான ஏழாமிடத்துக்குச்
செல்கிறார்.இதனால் கண்டச்
சனியின் காலம் ஆரம்பமாகிறது.
4.
கடகம் சனி புத்தி ஸ்தானமான ஐந்தாமித்து சஞ்சாரத்தை நிறைவு செய்து தான் வலிமை பெறக்கூடிய
ஸ்தானமான ஆறாமிடத்திற்கு வருகை தருகிறார்.
5.
சிம்மம் சனி சுக ஸ்தானமான நான்காமிடத்திலிருந்து நகர்ந்து புத்தி ஸ்தானமான ஐந்தாமிடத்திற்கு
வருகிறார். (இதனால் அல்லலான
அர்த்தாஷ்டமச் சனியின் காலம் முடிவடைகிறது.
6.
கன்னி சனி தைரிய ஜெய ஸ்தானமான மூன்றாமிடத்திலிருந்து மாறி சுகஸ்தானமான நான்காமிடத்திற்கு
வருகிறார் இதனால் அர்த்தாஷ்டமச் சனியின் காலம் ஆரம்பமாகிறது.
7.
துலாம் சனி குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திலிருந்து விடுபட்டு தைரிய ஜெய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு
வருகிறார் இதனால் உங்களுக்கு ஏழரை வருடங்களாக தடை பெற்றுக் கொண்டிருந்த ஏழரை சனியில்
மூன்றாம் பகுதியான பாதச் சனி (குடும்பச் சனி) பகுதியுடன் ஏழரைச் சனியின் முழுக் காலமும் முடிவடைகிறது
8.
விருச்சிகம் சனி உங்கள் ஜென்ம ராசியிலிருந்து விலகி குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்திற்கு வருகிறார். இதனால் ஏழரைச் சனியின் நடுப்பகுதியான
ஜென்ம சனியின் காலம் முடிவடைந்து அடுத்து ஏழரைச்சனியில் மூன்றாம் பகுதியான பாதச் சனி
(குடும்பச் சனியின் காலம் தொடங்குகிறது.ஆகவே ஏழரைச்
சனியில் இன்னும் இரண்டரை ஆண்டுக் காலம் மிதமுள்ளது)
9.
தனுசு சனி விரய ஸ்தானமான பன்னிரண்டாமிடத்தை விட்டு நீங்கி உங்கள் ஜென்ம ராசியிலேயே குடியேறுகிறார். (இதனால் ஏற்கனவே ஆரம்பித்து
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழரைச் சனியின் முதல் பகுதியான விரயச் சனியின் காலம் முடிந்து
நடுப்பகுதியான ஜென்மச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. எனவே ஏழரைச்
சனியில் இன்னும் ஐந்தாண்டு காலம் மீதம் இருக்கிறது.)
10. மகரம் சனி லாபஸ்தானமான பதினோராமிடத்திலிருந்து அகன்று
விரயஸ்தானமான பன்னிரண்டாமிடத்திற்கு வருகிறார்..இதனால் உங்களுக்கு ஏழரைச் சனியின் காலம் ஆரம்பமாகிறது.அதில் முதல் பகுதியான விரயச் சனியின் காலக் கட்டமும் தொடங்குகிறது.
11. கும்பம் சனி காரிய ஸ்தானமான பத்தாமிடத்திலிருந்து
விடுபட்டு லாப ஸ்தானமான பதினோராமிடத்திற்கு வருகை தருகிறார்.
12. மீனம் சனி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திலிருந்து
நகர்ந்து காரியஸ்தானமான பத்தாமிடத்திற்கு வந்து சேருகிறார்.
மேற்கண்ட சனிப் பெயர்ச்சி மஹா
யாகத்தல் பங்குபெற விரும்புவோர்
கீழ்கண்ட முகவரியில் தொடர்பு
கொள்ளவும்.
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஸ்தாபகர்,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீம், கீழ்புதுப்பேட்டை,அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம்.632513
E.MAIL. danvantripeedam@gmail.com தொடர்புக்கு
9443330203
Friday, March 24, 2017
தன்வந்திரி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாகம்
வேலூர் மாவட்டம
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி
குழந்தைவரம் வேண்டி வருகிற 01.04.2017 சனிக் கிழமை காலை 10.30 மணியளவில் வளர்பிறை சஷ்டியை
முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகத்துடன்
சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகத்துடன்
வெண்ணைய் காப்பு நடைபெற்று தம்பதிகளுக்கு வெண்ணைய்
பிரசாதத்துடன் தைல பிரசாதமும் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் வழங்க உள்ளார்..
தன்வந்திரி பீடத்தில்
கார்த்திகை குமரனுக்கும் நவநீத கிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளதால் தம்பதிகளுக்கு
மேற்கண்ட தெய்வங்களின்
அருள் கிடைத்து
குழந்தைபாக்கயம் விரைவில் ஏற்பட சஷ்டி விரதத்துடன்
இந்த ஹோமம் நடைபெற
உள்ளது.
சஷ்டி விரத மகிமை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
என்பது பழமொழி. இது தவறா னது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான்
உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம்
முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய
கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை
உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி
ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக
கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும்
சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும்
பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு
கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு
சஷ்டி விரதம் இருந்து
சந்தான கோபால யாகத்தில் கலந்து கொண்டு பிரசாதமாக வழங்கும் தைலத்தை உண்டு வயிற்றில்
தடவி வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும். என்கின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்
தன்வந்திரி பீடத்தில் சுயம்வர கலா பார்வதி யாகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சுயம்வர பார்வதி யாகம்
நடைபெறுகிறது.
இந்த சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதன்
மூலம் திருமண தாமதபடுவதர்க்கான தடைகள் நீங்கும்.பொருத்தமான தகுதியுள்ள கணவன் மனைவி
கிடைக்க வழிவகை செய்யும்.பொருத்தமான மணமகன் அல்லது மணமகள் கிடைப்பதற்கு தடையாக
இருக்கும் சிக்கல்களை நீக்குகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அளிக்கிறது.
பெண்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்குகிறார். இந்த ஹோமம் அனைத்து விதமான
உயிர்களையும் ஆசிர்வதிகிறது. மக்களின் கவலையை நீக்கி அவர்களுக்கு தகுந்த திருமண
வாழ்க்கை வாழ வழி செய்கிறது. அனைத்து பெண்களுக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை
தருகிறது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தன்வந்திரி பீடத்தில் அமாவாசை சிறப்பு யாகங்கள்
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 27.03.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணி
முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷம் நீங்க பித்ரு
தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ
பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
அமாவாசை என்பதால்
நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சூலினிப்ரத்தியங்கிரா
ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது மேலும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு
சிகப்பு குங்கும்ம், மஞ்சள்,,மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது..என்ற
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அமாவாசை யாகத்தின்
சிறப்பு
பித்ரு தோஷம் நீங்கும். தடைபட்ட
திருமணம் நடைபெறும்..
விவாகரத்து ஆனவர்களுக்கு வாழ்வு மலரும். தம்பதியரிடையே அன்னியோன்னியம்ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.. கடுமையான உடல் உபாதைகள் நீங்கும்., மனநோய் அகலும் முறையான திருமணம்நடக்கும், கருச்சிதைவை தடுக்கும்.. ஆண்வாரிசு
ஏற்படும். துர்மரணம் ஏற்படாது. போன்ற பல்வேறு
நன்மைகள் ஏற்படும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)