Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 29, 2019

Aadi Pradosha Pooja


தன்வந்திரி பீடத்தில்ஆடி பிரதோஷ பூஜை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று 29.07.2019 திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் ருத்ர ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

எந்த ஒரு மனிதரும் செயலாற்றும் சமயங்களில் செய்கின்ற காரியங்களை பொறுத்து புண்ணியம், பாவம் போன்றவை ஏற்படுகின்றன. நாம் மறைந்த பிறகும் நம்முடன் தொடர்ந்து வருகின்ற ஒரு விடயமாக இவை இருக்கிறது. பிறப்பு, இறப்பு வாழ்க்கை சுழற்சியை அறுத்து, வீடுபேறு அளிக்கும் தெய்வமாகும் சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு அற்புத தினம் தான் பிரதோஷம் தினம். மேலும் ஆடி மாதத்தில் திங்கள்கிழமை வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் விசேஷமான ஒரு நாளாகும்.

இந்நாளில் சிவபெருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் அபிஷேக ஆராதனைகளிலும் பங்கேற்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும், அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், சந்திர கிரக தோஷங்கள் நீங்கும், சித்த பிரம்மை, மன நல குறைபாடுகள் போன்றவை குணமாகும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும், வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும், மேலும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி பிரதோஷ தினமான இன்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் நடைபெற்ற ருத்ர ஹோமத்தில் விசேஷ மூலிகைகள், நவ சமித்துக்கள், நெய், தேன், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், விசேஷ புஷ்பங்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹாபூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மரகதேஸ்வர்ருக்கு பஞ்ச திரவிய கலசாபிஷேகமும், வில்வ இலைகளால் அர்ச்சனையும் நடைபெற்று மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறைபிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Sunday, July 28, 2019

Mookambika Homam


தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ தேவி மூகாம்பிகை ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் இன்று 28.07.2019 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதத்தை  முன்னிட்டு  காலை 10.00 மணி முதல் 12.00 மணி  வரை தேவி மூகாம்பிகை ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ காயத்ரீ தேவிக்கும், மஹாமேருவிற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

தேவி மூகாம்பிகையை வேண்டி நடைபெற்ற ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சகலகாரிய சித்தி பெறவும், சர்வ வஸ்யம், ரோக நிவர்த்தி, வாக்குப் பலிதம், திருஷ்டிதோஷ நிவர்த்தி, சத்ருநாசம், நேத்ர ரோக நிவர்த்தி, எதிலும் வெற்றி, சகல சம்பத்து விருத்தி பெறவும், சோகநாசம், பயம் நீங்கவும், ஞானம், வசீகரணம், ஆயுள் விருத்தி, புத்ர விருத்தி உண்டாகவும், வித்தை, சங்கீத விருத்தி, தனலாபம் உண்டாகவும், பதவி உயர்வு கிடைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட லசஷ்மி கடாசஷம், தீர்க்க சுமங்கலி பிராப்தி போன்ற பல்வேறு விதமான நன்மைகளை பெற குட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இந்த யாகத்தில் விசேஷ மூலிகைகள், மஞ்சள், குங்குமம், நவ சமித்துக்கள், வஸ்திரங்கள், விசேஷ புஷ்பங்கள், நெய், தேன், நிவேதனங்கள், சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து பால், மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர் போன்ற பல்வேறு திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Saturday, July 27, 2019

Vastu Day - Vastu Shanti Homam


தன்வந்திரி பீடத்தில்வாஸ்து பூஜையுடன் வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் இன்று 27.07.2019 சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.

அந்த வகையில் இன்று வாஸ்து நாளை முன்னிட்டு நடைபெற வாஸ்து சாந்தி ஹோமத்தில் நவகிரகங்களின் திருவருளை பெறும் பொருட்டு நவதானிங்களையும், நவரத்தினங்களையும், சிறப்பு மூலிகைகளையும் சேர்க்கப்பட்டது.

மேலும் இந்த வாஸ்து யாகத்திலும், அபிஷேகங்களிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வாஸ்து குறைபாடுகள் நீங்கவும், வீடு மனை பாக்யம் பெறவும், வாஸ்து தோஷங்கள் அகலவும், மேலும் பல்வேறு நன்மைகள் ஏற்பட கூட்டு பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


 




Thursday, July 25, 2019

1000 KG Red Chilli Abhishekam

1000 KG Red Chilli Abhishekam

at 

Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks to 

"MAALAI MALAR, SAKSHI, ANDHRA JYOTHI"

 Daily News Papers.




Dasa Bhairavar Yagam - Theipirai Ashtami Yagam


தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று 25.07.2019 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கும் தச பைரவர் யாகத்துடன் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவருக்கு நடைபெறும் யாகங்களிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று பைரவரை வழிபாடுவது வாழ்கையில் சிறந்த பலன்களை அளிக்கும். ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவபெருமானுடைய அம்சம் ஆவார்.

தேய்பிறை அஷ்டமி திதியியை முன்னிட்டு நடைபெற்ற இந்த யாக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பிரச்சனைகள் தீரவும், தொல்லைகள் நீங்கவும், நல்லருள் கிடைக்கவும், எண்ணிய காரியங்கள் நிறைவேறவும், நல்ல மக்கள் செல்வங்களை பெறவும், உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கவும், தொழிலில் லாபம் உண்டாகவும், வழக்குகளில் வெற்றி பெறவும், எதிரிகள் விலகவும், கடன் தொல்லைகள் தீரவும், யம பயம் அகலவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும், வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பு உண்டாகவும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், வறுமை நீங்கவும், பகைவர்களின் தொல்லைகள் அகலவும், பயம் நீங்கவும், பைரவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றவும், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறவும், வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறவும், வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடையவும், சனி கிரகத்தினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், வெளி நாடு வேலை வாய்புகள் கிடைக்கவும் மேலும் பல்வேறு நன்மைகளை ஏற்ப்பட கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.