தன்வந்திரி பீடத்தில்திருவோண ஹோமமும்
தைல திருமஞ்சனமும்.
வேலூர்
மாவட்டம் வாலாஜபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்
வருகிற 21.06.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ விநாயக தன்வந்திரி பெருமாளுக்கு திருவோண
ஹோமத்துடன் விசேஷ தைல திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
இப்பாரத
பூமியில் பிறந்த அனைவரும் 27 நக்ஷத்திரங்களுக்குள் அடக்கம்.
மனிதர்கள் மட்டுமில்லாது தெய்வங்களும் 27 நக்ஷத்திரங்களுக்குள்
அவதரித்தவர்களே. அந்த வகையில் திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தவரே எம்பெருமான்
ஸ்ரீமன் நாராயணன் ஆவார். அத்தகைய பெருமாள் அவதரித்த நக்ஷத்திரத்தில் க்ஷேத்திரங்களில்
நடைபெறும் உற்சவங்களிலும், பூஜைகளிலும், யாகங்களிலும், திருமஞ்சன வைபவங்களிலும்
பங்கேற்பவர்களுக்கு எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்க பெறலாம். கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு
தீர்வு காணும் விதமாக நடைபெறும் திருவோண ஹோமத்தில் பங்கேற்று பலன் பெற அன்புடன்
அழைக்கின்றோம்.
எந்த
விஷயத்தையும் சுத்தமாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்க முடியவில்லையா,
உங்களுக்கென்று வாழ்க்கையில் சில கொள்கைகள் இல்லையா, தீய பழக்க
வழக்கம் உள்ளவரா நீங்கள், மந்த புத்தியும், செயலில் ஈடுபாடு அற்றவரா நீங்கள்,
மற்றவர் பிரச்சினையில் சிக்கி தவிப்பவரா நீங்கள், உயர் பதவிகள் பெற்றும் வேலையில்
நாட்டம் இல்லாதவர்களா, பொருளாதாரத்தில் பற்றாக்குறையா உங்களுக்கு, உங்களது
பெற்றோரின் மேல் அதிக பற்று இல்லாதவரா. உங்களது நடத்தையில் அடக்கமும் நேர்மையும் இல்லாதவரா,
கடவுள் மேல் நம்பிக்கை குறைகிறதா உங்களுக்கு, ஆன்மீகத்தில் அதிக பெயரும் புகழும் பெற
வேண்டுமா, எதையும் ஒழுங்காக சிந்தித்து செயல்ப்பட முடியவில்லையா, அதிக தவறுகள் செய்துள்ளீர்களா,
பொருமையும் சுயமரியாதையும் கிடைக்க வேண்டுமா, பிரச்சனைகளை சந்திக்க வீரமும்
துணிச்சலும் இல்லையா, எதையோ மனதில் வைத்து கொண்டு கவலைப்படுகிறீர்களா, தொழில்,
வியாபாரத்தில் வருமானம் குறைகிறதா, கல்வி மற்றும் வருமானம், குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இல்லையா, உங்கள் மனைவி உங்கள் மனதை புரிந்து
கொண்டு நடப்பவராக இல்லையா, பிளைகளால் மகிழ்ச்சி இல்லையா, பிள்ளைகளின் உயர் கல்வி
தடைப்படுகிறதா.
மேற்கண்ட அனைத்து
பிரச்சனைகளுக்கும் தீர்வு இடைக்கும் விதத்தில் அமைகிறது திருவோண நக்ஷத்திர பூஜைகள்
மற்றும் ஹோமங்கள். திருவோண நக்ஷத்திரம்
27 நட்சத்திரங்களில்
22 வது நட்சத்திரமாகும்.
12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் இந்த நட்சத்திரம்
வரும் இந்த நட்சத்திரம் ஸ்ரீ விஷ்ணுக்கு (பெருமாளுக்கு) உகந்த நட்சத்திரமாக
வேதங்கள் ஆகமங்களில் கூறபட்டுகிறது. ஆகையால் தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின்
நலன் கருதி திருவோண ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு விசேஷ தைல திருமஞ்சனம்
மற்றும் ஆராதனைகள் செய்யப்படுகிறது.
தைலக்காப்பு
திருமஞ்சனமும் தைல பிரசாதத்தின் பலன்களும் :
வினைகளுக்கு
ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜா அம்சமாக
சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப் பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர். இந்தச்
சந்நிதியில் “கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் மாதாந்திர திருவோண நக்ஷத்திரத்தில் கர்ம
வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்வது
சிறப்பாகும். திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருமஞ்சனம்
செய்த தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் உடலில் ஏற்படும் வலிப்பு நோய்,
சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய், புற்று நோய், குறை
பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும்
நீங்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment