தன்வந்திரி பீடத்தில்சனி சாந்தி ஹோமம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்
உலக மக்கள் நலன் கருதி வருகிற 13.07.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனி கிரக தோஷங்கள் அகல சனி சாந்தி ஹோமமும்
பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாதள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும்
விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
அன்றாட யாகங்கள் நடைபெற்று யக்ஞபூமியாக திகழும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள்
நலனுக்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும் சென்ற 14.06.2019 வெள்ளிக்கிழமை
ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர் ஆலயங்களின் மஹா
கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் 48 நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கண்ட
சனி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.
சனிக்கிரகத்தினால்
ஏற்படும் குடும்ப கஷ்ட நஷ்டங்களும், உடல்நல
குறைவும், விபத்துகளும், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம்
ஏற்பட்டலும், அலுவலகத்தில் ஏதாவது பிரச்னையும், பித்ரு தோஷமும், திருமணத்
தடையும், புத்திர பாகியம் இன்மையும் போன்ற தோஷங்களும், இடமாற்றம், வீட்டில் பிள்ளைகள், சொல்பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தலும், தொழில், உத்யோகம், வியாபாரம்
போன்றவைகளில் ஏற்படும் தடைகள் நீங்கவும், ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, சனி திசை, சனி புக்தி
போன்றவையின் தாக்கம் குறையவும், மேலும் சனி பகவான் ஆசிர்வாதங்களை பெற்று ஆரோக்யம்,
ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் மகிழ்ச்சியான நல்வாழ்வு வாழவும் இந்த சனி சாந்தி ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.
மேலும்
பக்தர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு இறையருளுடன் குருவருள் பெற அன்புடன்
அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment