வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியில் மஹாபைரவர் யாகம்வருகிற 25.06.2019 செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 25.06.2019 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மஹா காலபைரவர் யாகத்துடன் நவ பைரவர் யாகம் நடைபெறுகிறது.
இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சித்தர்களின் அருளாசி கிடைக்கும்,
இடி, மின்னல், எரிமலை, பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல்
கொந்தளிப்பு போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும், காட்டு
மிருகங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் நீங்கும், மாந்ரீக தோஷம், துர்தேவதைகளின்
சேஷ்டைகள் அணுகாது, சகல நோய்களும் குணமாகும், எண்ணிய காரியங்களில் வெற்றி பெறலாம்,
சகல சம்பத்தும் திருமகள் திருவருளால் கிடைக்கும், சர்வ ஜன வசியம் கிடைக்கும், வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் பெறலாம், சத்துருக்கள்
சரணடைவார்கள்.
இந்த யாகத்தை
தொடர்ந்து மஹா காலபைரவருக்கு நவ கலச திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்
நடைபெற உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் மஹா காலபைரவர் யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பைரவர் அருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Its definitely important and very Helpful for me, after see your information i fell your knowledge. Thanks For Sharing about our tradition
ReplyDelete